- Advertisement -
Homeபொழுதுபோக்குநானும் அந்த தப்பை செஞ்சிருக்கேன், எனக்கே அவமானமா இருந்துச்சு… - சிறை படம் குறித்து பிரபல...

நானும் அந்த தப்பை செஞ்சிருக்கேன், எனக்கே அவமானமா இருந்துச்சு… – சிறை படம் குறித்து பிரபல இயக்குனர் ஓபன்டாக்!

- Advertisement -

எப்போதுமே ஒரு நல்ல படம் அதற்கான வெற்றியை வரவேற்பை தானாகவே ஏற்படுத்திக் கொள்ளும் என்று சொல்வார்கள். அதுபோல நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு எந்த பிரமோவும் விளம்பரமும் தேவைப்படுவதில்லை. அந்த படத்தை பார்க்கும் ரசிகர்களே அந்த படத்தை பிரமோ செய்து மக்களிடம் கொண்டு சேர்த்து விடுவார்கள்.

அந்த வகையில்தான் காக்கா முட்டை பார்க்கிங் சித்தா லப்பர் பந்து குடும்பஸ்தன் குட்நைட் டூரிஸ்ட் ஃபேமிலி மாமன் என பல படங்கள் மக்களால் கொண்டாடப்பட்டன. ஒரு படம் ரசிகர்களுக்கு முழு திருப்தி தரும் போது அதை மற்றவர்களும் உணர வேண்டும் என்று ஒவ்வொரு ரசிகரும் நினைப்பார்கள். அவர்களே அந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக உதவுவார்கள்.

- Advertisement -

அந்த வகையில் அறிமுக இயக்குனர் சுரேஷ் இயக்கத்தில் விக்ரம் பிரபு அக்சய்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சிறை படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இந்த படத்துக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார். இந்த படம் 2025ம் ஆண்டில் மிகச்சிறந்த தமிழ் படங்களில் ஒன்றாக பாராட்டுகளை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. பெப்சி அமைப்பின் தலைவராகவும் உள்ளார். நடிகை ரோஜாவின் கணவர் என்பது கூடுதல் தகவல். சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ஆர் கே செல்வமணி கூறியதாவது, நான் கூட ஆரம்பத்தில் என்னுடைய சில படங்களில் இஸ்லாமியர்களை வில்லனாக காட்டியுள்ளேன்.

- Advertisement -

முன்பு இருந்த காலகட்டத்தில் இருந்த தூண்டுதலில் நான் இப்படியான கேரக்டர்களை வடிவமைத்து தவறு செய்து விட்டேன். நானும் போலீஸ் துறை சார்ந்த படங்கள் எடுத்து இருக்கிறேன். ஆனால் சிறை படம் பார்த்த பிறகு எனக்கு ரொம்பவும் அவமானமாக இருந்தது. சிறை படத்தில் இருக்கும் காவல்துறை காட்சி இந்திய ஒருமைப்பாட்டுக்கு சிறந்த உதாரணமாக இருந்தது.

இந்த காட்சி மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களை காலில் இருக்கும் செருப்பை கழட்டி அடிச்ச மாதிரி இருந்திருக்கும். அவ்வளவு அழகாக அந்த படத்தை எடுத்து இருக்கிறார்கள் என்று ஆர்கே செல்வமணி வெளிப்படையாக பாராட்டி இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆர்கே செல்வமணி இயக்கிய புலன் விசாரணை கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பல படங்கள் போலீஸ் கதைகளில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்