- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்த புஸ்லி ஆனந்த் அவர்தான், தனுஷ் பட இயக்குனரை மேடையில் கலாய்த்த இயக்குனர் ஆர்கே செல்வமணி!

அடுத்த புஸ்லி ஆனந்த் அவர்தான், தனுஷ் பட இயக்குனரை மேடையில் கலாய்த்த இயக்குனர் ஆர்கே செல்வமணி!

- Advertisement -

நடிகர் தனுஷ் நடித்த திருடா திருடி சீடன் ஆகிய படங்களை இயக்கியவர் சுப்ரமணியம் சிவா. இயக்குனர் அமீர் நடித்த யோகி என்ற படத்தையும் அவர் இயக்கி இருக்கிறார். இவர்தான் தற்போது நடிகர் தனுஷின் அகில இந்திய ரசிகர் மன்ற தலைவராக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழா மேடையில் பேசிய இயக்குனர் ஆர்கே செல்வமணி, சுப்பிரமணி சிவாவை குறிப்பிட்டு இவர்தான் அடுத்த புஸ்லி ஆனந்த் என்று சொல்லிவிட்டு சில நிமிடங்கள் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே இருந்தார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனென்றால் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதாக கூறப்படும் நிலையில் தவெக கட்சியில் விஜய்க்கு புஸ்லி ஆனந்த் போல போல நடிகர் தனுஷூக்கு சுப்பிரமணியம் சிவா இருப்பதை சுட்டிக்காட்டி ஆர்கே செல்வமணி ஜாலியாக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்