வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடித்த திரைப்படம் லியோ. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்த விஜய், லியோ திரைப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இணைந்து இருந்தார். இதில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். லியோ திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால், லியோ திரைப்படத்திற்காக விஜய் ரசிகர்கள் மட்டுமே ஏராளமான காத்திருந்தனர். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த விமர்சனத்தை பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.
முதல் பாதியை சுவாரசியமாக கொண்டு சென்று இருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இரண்டாம் பாதியில் அதை நழுவ விட்டார். குறிப்பாக, அதில் இடம்பெற்ற நரபலி சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களுக்கு சலிப்பை கொடுத்தது. கேங்ஸ்டர் பாணியில் இருக்கும் என்று நம்பி இருந்த ரசிகர்களுக்கு லியோ திரைப்படம் சற்று ஏமாற்றத்தையே அளித்தது. இது ஒரு பக்கம் இருந்தாலும் விமர்சனங்கள் அந்த திரைப்படத்தின் வசூலை எள்ளளவும் பாதிக்கவில்லை.
ஆயுத பூஜை விடுமுறை என்பதால் லியோ திரைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் படையெடுக்க, அந்தத் திரைப்படம் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியது. இதனை தொடர்ந்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இருப்பினும் படத்தின் இரண்டாம் பாதி நன்றாக எடுத்து இருக்கலாம் என்று ரசிகர்கள் கூட அது என்னுடைய தவறுதான் என்று ஒத்துக் கொண்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
அதேசமயம் நீங்கள் பார்த்தது, மன்சூர் அலிகான் பார்வையில் இருந்து சொல்லப்பட்ட காட்சி என்றும், அது எப்படி வேணாலும் நடந்திருக்கலாம் என்றும் கூறி ட்விஸ்ட் வைத்தார். லோகேஷ் கனகராஜ் இந்த பேச்சு பரவலாக பேசப்பட்டாலும், அவருடைய விளக்கம் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. இப்படியான சூழல் தான் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர், லியோ திரைப்படத்தையும் லோகேஷ் கனகராஜ் பற்றியும் மறைமுகமாக பேசியிருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது,
சமீபத்தில் நான் ஒரு திரைப்படத்தை பார்த்தேன். அந்த இயக்குனரை தொடர்பு கொண்டு முதல் பாதி நன்றாக இருப்பதாக கூறினேன். அவரும் அதைக் கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால் இரண்டாம் பாதி அந்தளவு சிறப்பாக இல்லை. அந்த மதத்தில் அப்படி ஒரு நம்பிக்கை எல்லாம் இல்லை. ஒரு தந்தையை தனது பிள்ளையை பலி கொடுக்க மாட்டார் என்று இயக்குனருடன் பேசினேன். ஆனால் அந்த இயக்கினரோ நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்று கூறி போன வச்சுட்டாரு. ஆனால் அந்த திரைப்படம் வெளியான பிறகு அதனை நிறைய பேர் கிண்டல் அடித்தார்கள் என்று கூறி இருக்கிறார். எஸ் ஏ சந்திரசேகரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாக, அவர் நிச்சயம் லியோ திரைப்படத்தை குறிப்பிட்டு தான் பேசி இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.





