- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜாவாக இருந்தவரை விஜய் ஆண்டனியா மாற்றியதே எஸ்.ஏ சந்திரசேகர் தானாம் -...

பிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜாவாக இருந்தவரை விஜய் ஆண்டனியா மாற்றியதே எஸ்.ஏ சந்திரசேகர் தானாம் – சுவாரசிய தகவல்

- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்துவரும் விஜய் ஆண்டனி இன்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு தற்போது ரசிகர்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவ்வேளையில் விஜய் ஆண்டனியின் பெயர் எவ்வாறு உருவானது? என்பது குறித்த சுவாரசியமான தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். சின்னத்திரையில் “சின்ன பாப்பா பெரிய பாப்பா”, “காதலிக்க நேரமில்லை” “கனா காணும் காலங்கள்” என டைட்டில் சாங்குகளை இசையமைத்து இசையமைப்பாளராக தனது இசைப்பாயத்தை துவங்கிய விஜய் ஆண்டனி பல ஆண்டுகள் போராட்டத்தை சந்தித்தார்.

அதன்பிறகு கடுமையான முயற்சிக்கு பலனாக பெரிய திரையில் 2005-ஆம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பின்னர் 2009-ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மெல்ல மெல்ல படிப்படியாக பிரபலமான இசையமைப்பாளராக மாறினார்.

- Advertisement -

அதன் பின்னர் அதோடு நிறுத்திக்கொள்ளாமல் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் உருவெடுத்த அவர் 2012-ஆம் ஆண்டு வெளியான “நான்” படத்தில் கதாநாயகராக அறிமுகமாகினார். அதனை தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், நம்பியார், சைத்தான், எமன், அண்ணாதுரை, காலி, திமிரு புடிச்சவன், கொலைகாரன், பிச்சைக்காரன் 2, கொலை என பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இன்னும் சில திரைப்படங்களும் அவருக்கு அடுத்ததாக வரிசையில் இருக்கிறது.

Vijay-Antony

இசையமைப்பாளராக தனது பயணத்தை துவங்கி தற்போது கதாநாயகனாகவும், பாடகராகவும், எடிட்டராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் பன்முகம் கொண்ட இந்த விஜய் ஆண்டனியின் வளர்ச்சி இன்று பெரிய அளவில் இருப்பதற்கு காரணமே தளபதி விஜயின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் கொடுத்த அந்த வாய்ப்பு தான் என்று திரையுலகித்தனர் பேசி வருகின்றனர். வாய்ப்பு தேடி கஷ்டப்பட்டு வந்தவரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதே எஸ்,ஏ சந்திரசேகர் தானாம்.

- Advertisement -

அதோடு சுக்ரன் படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக அறிமுகமாக இருந்தபோது அவரது இயற்பெயரான பிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜா எனும் பெயரை “அக்னி” என்று மாற்றிக் கொண்டு டைட்டில் ட்ராக்கில் அந்த பெயரை போடச் சொன்னாராம். ஆனால் “பிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜாவும் வேண்டாம்”, “அக்னியும் வேண்டாம்” உனது பெயரில் உள்ள ஆண்டனிக்கு முன் விஜய்யை சேர்த்துக் கொள் வெற்றிகரமாக இருப்பாய் என்று கூறி எஸ்.ஏ.சி தான் விஜய் ஆண்டனி என்று பெயரும் வைத்தாராம்.

அதன் பின்னரே விஜய் ஆண்டனி தற்போது கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருகிறார் என்றும் இன்று அவரது வெற்றிகரமான திரைப்பயனத்திற்கு எஸ்.ஏ சந்திரசேகர் தான் முக்கிய காரணம் என்றும் விஜய் ஆண்டனி குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்