நடிகர் அஜீத்குமார் இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை லைக்கா புரடக்சன்ஸ் தயாரிக்கிறது. திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
தமிழ் சினிமா நடிகர்களின் கமல்ஹாசன், நவரச நாயகன் கார்த்திக், அரவிந்த் சாமி, மாதவன், அஜீத்குமார், ஜெயம் ரவி என அழகான நடிகர்களுக்கு என, தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. குறிப்பாக கல்லூரி மாணவியர், இளம்பெண்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நடிகரை ஹேண்ட்சம்மாக நினைப்பதுண்டு.
அந்த வகையில் கடந்த 1990-2000ம் ஆண்டுகளில் பெண்களின் ஆசை நாயகனாக இருந்தவர் அஜீத்குமார். இவர் ஆசை படத்தில் நடித்து அறிமுகமானவர் என்பதால், ஆசை நாயகன் அஜீத் என்றுதான், அஜீத் நடித்த அந்த காலகட்ட படங்களில் டைட்டில் கார்டில் குறிப்பிடுவார்கள்.
அதன்பிறகு அஜீத்குமார், ஷாலினியுடன் திருமணமான பின் அவரது படங்களில் டைட்டில் கார்டில் அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார் என குறிப்பிடப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் அப்படி எதுவுமே வேண்டாம் என அஜீத்குமார் புறக்கணித்து விட்டார். தல என்று அழைப்பதையும் அஜீத் விரும்புவதில்லை. ஏகே அல்லது அஜீத்குமார் என்பதுதான் அவரது விருப்பமாக உள்ளது.
அஜீத்குமாருடன் பல நாயகிகள் நடித்துள்ளனர். அவர்களில் நடிகை சதாவும் ஒருவர். இவர் ஜெயம் படம் மூலம் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்நியன், எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் சதா நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அஜீத்துடன் திருப்பதி என்ற படத்தில் ஜோடியாக சதா நடித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை சதா, இதை சொல்லலாமா, வேண்டாமா என்று எனக்கு தெரியவில்லை. திருப்பதி படத்தில் நான் நடித்த போது, அதில் எனக்கு ஜோடியாக நடித்த அஜீத்குமார் மீது எனக்கு எக்கச்சக்கமான கிரஷ் இருந்தது என்று கூறியிருக்கிறார். இது. தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





