நடிகை சாயிஷா, தமிழ் சினிமாவில் மிக அழகான நடிகையாக வலம் வந்தவர். சொற்ப எண்ணிக்கையில் படங்களில் நடித்தவர் என்றாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருந்தார். வனமகன், கடைக்குட்டி சிங்கம், காப்பான், வாட்ச்மேன், ஜூங்கா, டெடி, கஜினிகாந்த் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார்.
ஜெயம் ரவி, கார்த்தி, விஜய் சேதுபதி, சூர்யா, மற்றும் ஆர்யாவுக்கு ஜோடியாக 2 படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் தன்னைவிட 15 வயதுகள் அதிகமான ஆர்யாவை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு சாயிஷா நடிக்கவில்லை. குடும்பத்தை கவனித்துக்கொள்கிறார்.
இந்நிலையில் கடந்தாண்டில் வெளியான பத்துதல படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடிகை சாயிஷா ஆடியிருந்தார். சாயிஷா முறைப்படி நடனம் கற்றவர். அதனால் பாட்டு அவரது நடனம், ரசிகர்களை கொண்டாட்டம் போட வைத்தது. பத்துதல படத்தில் ஹைலைட்டான விஷயங்களில் சாயிஷாவின் பாடலும் ஒன்றாக இருந்தது.
சாயிஷா சில படங்களில் நடித்தவர். அந்த படங்களும் வெற்றிப்பெற்ற படங்களாக இருந்தாலும் நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா அளவுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. எனினும் நல்ல அழகான நடிகையாக மட்டுமே ரசிகர்களை கவர்ந்தார். கடைக்குட்டி சிங்கம் படத்தில், சாயிஷா கதாநாயகியாகவும், அதே படத்தில் பிரியா பவானி சங்கர், கதாநாயகன் கார்த்தியின் முறைப்பெண்ணாகவும் நடித்திருந்தார்.
சாயிஷா திருமணத்துக்கு பிறகு, சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. எனினும் தனது கணவர் ஆர்யாவின் வற்புறுத்தல் காரணமாக, பத்துதல படத்தில் அந்த ஐட்டம் பாட்டுக்கு நடனமாட ஒத்துக்கொண்டுள்ளார். மனைவியின் ஆட்டத்தை நேரில் பார்த்து வாய்பிளந்து விட்டாராம் ஆர்யா. அந்த அளவுக்கு நெளிவு சுளிவு காட்டி ஆடி அசத்தியிருக்கிறார் சாயிஷா.
பத்து தல படத்தில் ஐட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட சாயிஷாவுக்கு சம்பளமாக ரூ. 40 லட்சம் தரப்பட்டுள்ளது. அதே படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியா பவானி சங்கருக்கு சம்பளமாக ரூ. 70 லட்சம் தரப்பட்டுள்ளது. 5 நிமிட பாடல்காட்சியில் ஆடிய சாயிஷாவுக்கு ரூ. 40 லட்சம், இரண்டரை மணி நேர படத்தில் நடித்த பிரியா பவானி சங்கருக்கு, சாயிஷாவை விட ரூ. 30 லட்சம் அதிகமாக தருவதா, என்ற ரசிகர்களின் கேள்வி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





