தமிழ் சினிமாவில் எடுத்த எடுப்பிலேயே பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக அறிமுகமாகாமல், தனது கடும் உழைப்பினால் மெல்ல மெல்ல அந்த உயரத்தைத் தொட்ட நடிகைகள் இங்கு பலர் இருக்கிறார்கள். இதில் குறிப்பாக திரிஷா மற்றும் சமந்தாவை கூறலாம். இருவரும் முதலில், சிறு சிறு கதாபாத்திரங்கள், துணை கதாநாயகி உள்ளிட்ட வேடங்களில் நடித்து பின்னர் ரசிகர்களின் அன்புக்கு சொந்தமானார்கள்.
சமந்தா ஆரம்ப காலகட்டத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடித்திருப்பார். கடைசி கிளைமாக்ஸ் காட்சிகளில் மட்டும் அவர் தோன்றுவார். இந்த நிலையில் சமந்தாவுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் நான் ஈ. அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக முக்கிய வேடத்தில் நடித்த சமந்தாவுக்கு குவிய ஆரம்பித்தன.
அதில் நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் நடித்து, தமிழ் மற்றும் தெலுங்கில் பல விருதுகளுக்கு சொந்தக்காரரானார். தொடர்ந்து சூர்யாவுடன் அஞ்சான், விஜய்யுடன் தெறி ஆகிய திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக முன்னேறினார் சமந்தா.
தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படத்திலும் சமந்தா அதிக கவனம் செலுத்தி வந்தார். இதன் நடுவே தெலுங்கில் முன்னணி நடிகரான, நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுடன் சமந்தாவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். இதனைத் தொடர்ந்தும் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வந்தார் சமந்தா.
முக்கியமாக, புஷ்பா படத்தில் அவர் ஊ சொல்றியா மாமா என்னும் குத்து பாடலுக்கு நடனம் ஆடினார். இந்தப் பாடல் தெலுங்கு சினிமாவை தாண்டி மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. அதேசமயம் நாக சைதன்யா சமந்தா இடையே உறவு முடிந்தது. இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.
இது ஒரு பக்கம் இருக்க, சமந்தா அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் திரைத்துறையில் இருந்து அவர் முற்றிலுமாக விலகினார். எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல், தனது மருத்துவத்திற்கு மட்டும் அவர் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் சமந்தாவின் 37-வது இன்று கொண்டாடப்படும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நாளில் அவர், புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளார். ட்ராலாலா மூவிஸ் பிக்சர்ஸ் என அந்த நிறுவனத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் முதல் திரைப்படத்திற்கான அறிவிப்பையும் சமந்தா வெளியிட்டிருக்கிறார். படத்திற்கு பங்காரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியை கையில் இந்த படி மிகவும் ஸ்டைலிசாக அனிமேஷன் உருவத்தில் சமந்தா காட்சியளிக்கிறார்.





