- Advertisement -
Homeபொழுதுபோக்குராயன் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆச்சு... திங்கட்கிழமை தனுஷ் எனக்கு கால் பண்ணாரு... பத்து நாள் கழிச்சு...

ராயன் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆச்சு… திங்கட்கிழமை தனுஷ் எனக்கு கால் பண்ணாரு… பத்து நாள் கழிச்சு அந்த அற்புதம் நடந்துச்சு… ஆச்சரியமூட்டிய சமுத்திரக்கனி….

- Advertisement -

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான தனுஷ், இன்று 50 திரைப்படங்களை கொடுத்து கம்பீரமாக தமிழ் சினிமாவில் காட்சி அளிக்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல் பாடலாசிரியர் தயாரிப்பாளர் என பல்வேறு முகங்கள் கொண்ட அவருக்கு, ஒரு படத்தை இயக்கும் அசாத்திய திறமையும் இருக்கிறது. இதனை பவர் பாண்டி திரைப்படத்திலேயே தனுஷ் நிரூபித்து விட்டார்.

இருப்பினும் தனது 50 ஆவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்க ஆசைப்பட்டு வேலை பார்த்தது தான் ராயன் திரைப்படம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஜூலை மாதம் வெளியான இந்த திரைப்படம், 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. ஆனால் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிய அளவு வரவேற்பு பெறவில்லை.

- Advertisement -

பவர் பாண்டியில் தனுஷின் இயக்கத்தை நம்பி போன ரசிகர்களில் பெரும்பாலானோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதல் பாதியை ஓரளவு கொண்டு சென்ற தனுஷ் இரண்டாம் பாதியில் கோட்டை விட்டார். வழக்கம்போல சகோதரர்களுக்குள் மோதல், அதற்கிடையேயான ஆக்சன் காட்சிகள் என அதர பழசான கதையையே கூறி இருந்ததால் பலர் அதனை கிண்டல் செய்தனர்.

இருப்பினும் வசூல் ரீதியாக அந்த திரைப்படம் குறை வைக்காததால், மகிழ்ச்சி அடைந்த தனுஷ், திரைப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு விருந்து வைத்தார். இதனிடையே அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை அவர் இயக்கி இருக்கிறார். இளைஞர்களின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகிறது.

- Advertisement -

ஏற்கனவே இதிலிருந்து கோல்டன் ஸ்பேரோ பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து இட்லி கடை என்னும் திரைப்படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார். இதில் அவருக்கு கௌரவ கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. கதாநாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். கிட்டத்தட்ட இதன் இறுதிப் பணிகளை எட்டி இருக்கிறார் தனுஷ். இந்தப் படத்தில், சமுத்திரக்கனியும் நடித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து அவரே ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில், வெள்ளிக்கிழமை ராயன் திரைப்படம் வெளியானது. திங்கட்கிழமை தனுஷ் எனக்கு போன் செய்தார். இட்லி கடை திரைப்படத்தின் கதையை விவரித்து என்னிடம் கால்ஷீட் கேட்டார். உடனடியாக 10 நாட்களுக்குள் தேனியில் படப்பிடிப்பையும் தொடங்கினார். இதுதான் தனுஷ் சினிமா மீது வைத்திருக்கும் உண்மையான காதல் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்