சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகர் விஜய் இன்று தமிழக முதல்வராக பவனி வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து 2 ஆண்டுகள் 4 மாதங்களில் முதல்வர் பதவியில் அமர்ந்தவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. 75 ஆண்டுகள் ஆன திமுக 55 ஆண்டுகள் ஆன அதிமுக என 2 ஜாம்பவான் கட்சிகளை அவர் வென்றுள்ளார்.
நடிகர் விஜய்க்கு மக்கள் அளித்த ஆதரவும் அவர் மீது மக்கள் காட்டிய அன்பும்தான் இந்த அபார வெற்றிக்கு காரணம். ஆனால் தமிழக மக்கள் கொண்டாடிய இந்த மனிதரை அவரது குடும்பம் கொண்டாட தயாராக இல்லை. விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருக்கிறார்.
மேலும் தனது கணவருக்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய தொடர்பு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் மகள் திவ்யா சாஷா என யாருமே விஜயுடன் இல்லை. மனைவி பிள்ளைகளை பிரிந்து தனியாக தான் நீலாங்கரை வீட்டில் விஜய் இருந்து வருகிறார். இது தமிழக மக்கள் அறிந்த உண்மை தான்.
விஜய் தமிழக முதல்வராக பங்கேற்ற அந்த விழாவில் விஜயின் மனைவி மற்றும் பிள்ளைகள் என 3 பேரும் கலந்துக்கொள்ளவில்லை. நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடந்த இந்த விழாவில் ஏராளமானோர் பங்கேற்ற போதிலும் விஜயின் மனைவி பிள்ளைகள் என 3 பேரும் முன்வரிசை இருக்கைகளில் இல்லாதது பெரிய வருத்தத்தையே விஜய் ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது.
இதுகுறித்து திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி கூறியதாவது, முதலமைச்சர் விஜய் பதவி ஏற்பு விழாவில் அந்த முதல் வரிசையில் அந்த மூன்று பேர் இல்லாதது எனக்கு ரொம்பவும் வருத்தமாக இருந்தது. ஏன்னா உங்களை வீழ்த்த நினைத்தவர்களையே வீடு தேடி போய் கைகுலுக்கி அன்பு செலுத்தியவர் நீங்கள். அந்த 3 பேரை விட்டுற மாட்டீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.
விட்டுறாதீங்க தலைவா. ஏன்னா பல கோடி இளைஞர்கள் உங்கள் பின்னால் உங்களை பின் தொடர்ந்து வருகிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் குடும்ப வாழ்க்கை மீதும் பெற்ற குழந்தைகள் மீதும் பிடிப்பு வரவேண்டும். அதை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று இயக்குனர் சமுத்திரக்கனி முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.





