- Advertisement -
Homeபொழுதுபோக்குவீடு வீடாக பேப்பர் போட்டு வளர்ந்தவன் நான், இப்போதும் மூட்டை தூக்கி பிழைத்துக் கொள்வேன் -...

வீடு வீடாக பேப்பர் போட்டு வளர்ந்தவன் நான், இப்போதும் மூட்டை தூக்கி பிழைத்துக் கொள்வேன் – மகள் திருமண செலவு குறித்த விமர்சனத்தில் ஆவேசப்பட்ட நடிகர் சரத்குமார்

- Advertisement -

நடிகர் சரத்குமார், தமிழ் சினிமாவில் 1990களில் பெயர் சொல்லும் முன்னணி நடிகராக இருந்தவர். கண் சிமிட்டும் நேரம், புரியாத புதிர் போன்ற படங்களில் துணை நடிகராக நடித்த சரத்குமார், புலன் விசாரணை படம் மூலம் வில்லனாக நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சேரன் பாண்டியன், சூரியன், நாட்டாமை, சூரிய வம்சம், நட்புக்காக படங்கள் மூலம் முன்னணி நடிகராக மாறினார்.

1996ம் ஆண்டில் சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கத்தை துவக்கினார். ஆனால் அரசியலில் அவரால் நினைத்த இடத்தை அடைய முடியவில்லை, தொடர்ந்து படங்களில் நடித்துவந்த சரத்குமார், நடிகை ராதிகாவை 2வது திருமணம் செய்துக்கொண்டார். சூரியவம்சம் படத்தில் நடித்த போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

- Advertisement -

சரத்குமார், சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பே, மும்பையில் சாயாதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர்தான் வரலட்சுமி சரத்குமார். சாயாதேவி துவக்கத்தில் சரத்குமாரை விட்டு பிரிந்து இருந்தார். ஆனால் சில ஆண்டுகளாக, அவர் சரத்குமார், ராதிகா குடும்பத்துடன் இணக்கமாகி விட்டார். சாயாதேவி, முதன்முறையாக பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும் நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

வரலட்சுமி சரத்குமார், தமிழில் சிம்புவுடன் நடித்து அறிமுகமான படம் போடா போடி. தொடர்ந்து சண்டக்கோழி 2, கன்னிராசி 2, தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்த வரலட்சுமி சரத்குமார், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை, சமீபத்தில் காதல் திருமணம் செய்துக்கொண்டார். நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், அவருக்கு 15 வயதில் மகள் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் மிக பிரமாண்டமாக நடந்த நிக்கோலாய் சச்தேவ் – வரலட்சுமி திருமண விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள் திரளாக பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர். தாய்லாந்தில் திருமணம், சென்னை தாஜ் ஓட்டலில் ரிசப்ஷன் என ஒரு வார காலமாக நடந்த இந்த பிரமாண்ட திருமண விழா கொண்டாட்டங்களுக்கு ரூ. 800 கோடி வரை செலவானதாக, தகவல் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து விளக்கம் தந்துள்ள நடிகர் சரத்குமார், என் மகள் திருமணத்துக்கு 800 கோடி ரூபாய் செலவு என்று யூடியூப்பில் செய்தியை பரப்புகின்றனர். அவ்வளவு பணம் எங்கே இருக்கிறது என்று எனக்கே தெரியவில்லை. இந்த செய்தி முற்றிலும் தவறானது. எதுவுமே தெரியாமல் தவறான தகவலை பரப்புகின்றனர். நான் வீடு வீடாக போய் பேப்பர் போட்டு வளர்ந்தவன். இப்போது விட்டால் கூட மூட்டை தூக்கி பிழைத்துக்கொள்வேன். அதற்கு காரணம், இந்த வயதிலும் நான் திடமாக இருக்கிறேன், என்று பேசியிருக்கிறார் நடிகர் சரத்குமார்.

- Advertisement -

சற்று முன்