- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த 2 நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத நடிகர் அஜீத்குமார், விஷப் பரீட்சையில் இறங்குவது சரிதானா? - கார்...

அந்த 2 நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத நடிகர் அஜீத்குமார், விஷப் பரீட்சையில் இறங்குவது சரிதானா? – கார் ரேஸை போல சினிமாவையும் நினைச்சுட்டாரா?

- Advertisement -

குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு நடிகர் அஜீத்குமார் நடிக்கும் புதிய படத்தை ஏகே 64 படத்தை அஜீத்குமாரின் மனைவி ஷாலினியே தயாரிக்கிறார். இந்த படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராக களத்தில் இறங்குகிறார். இந்த படத்துக்கு டேர் டெவில் என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் படப்பிடிப்பு துவங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

நடிகர் அஜீத்குமார் புதிய படங்களில் நடிக்க சம்பளம் ரூ. 185 கோடி கேட்ட நிலையில் அவரது 64வது படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. சன் பிக்சர்ஸ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சத்யஜோதி பிலிம்ஸ் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் டான் பிக்சர்ஸ் என பல தயாரிப்பு நிறுவனங்களும் மறுத்து விட்டன.

- Advertisement -

அதிகபட்சமாக ரூ. 110 கோடி வரை சம்பளம் தர சில தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்த நிலையில் அஜீத்குமார் தரப்பு மறுத்துவிட்டது. குறைந்த பட்சம் ரூ. 150 கோடி சம்பளம் என்றால் அஜீத்குமார் தரப்பில் நடிக்க சம்மதம் தெரிவித்த நிலையில் எந்த தயாரிப்பாளரும் அந்த நிபந்தனைக்கு கட்டுப்படவில்லை.

அஜீத்குமார் சம்பளத்தை குறைத்துக்கொண்டு நடிக்க வேண்டும். அல்லது அவர் பிராபர்டி ஷேர் என்ற லாபத்தில் பங்கு அடிப்படையில் சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற 2 நிபந்தனைகளை தயாரிப்பாளர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அஜீத்குமார் அந்த 2 நிபந்தனைகளையும் புறக்கணித்த நிலையில் இப்போது தனது மனைவி ஷாலினி பெயரில் அவரே தனது படத்தை சொந்தமாக தயாரிக்க முன்வந்துள்ளார்.

- Advertisement -

நடிகர் அஜீத்குமாரை பொறுத்த வரை அவரது படங்களின் வியாபாரம் ரூ. 225 கோடி என்று சொல்லப்படுகிறது. இதில் 300 கோடி 400 கோடி ரூபாய் என அதிக பட்ஜெட்டில் எடுத்தால் நிச்சயம் பெரிய நஷ்டம் ஏற்படும். நடிகர் விஜய்க்கு இருப்பது போல கேரளா ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா மாநிலங்களில் அஜீத்குமாருக்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இல்லை.

வெளிநாடுகளில் ஓவர்சீஸ் ரிலீஸ்சிலும் பெரிய அளவில் அஜீத்குமார் விஜய் ரஜினியை போல கல்லா கட்டவும் வாய்ப்பில்லை. அதனால் அஜீத்குமார் கார் ரேஸை போல சினிமாவிலும் ஜெயித்து விடலாம் என்று சினிமா தயாரிப்பை எளிதாக நினைத்து விடக்கூடாது. இது ஒரு விஷ பரீட்சை தான். நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருந்தால் மட்டுமே ஜெயிக்கும். ஸ்டார் வேல்யூ கணக்கெல்லாம் இப்போது சினிமாவில் எடுபடுவதில்லை என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்