- Advertisement -
Homeபொழுதுபோக்குசண்முக பாண்டிய நடிக்கும் புதிய திரைப்படம்... என்ன மாதிரி கதை தெரியுமா?

சண்முக பாண்டிய நடிக்கும் புதிய திரைப்படம்… என்ன மாதிரி கதை தெரியுமா?

- Advertisement -

கேப்டன் என்றாலே நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது விஜயகாந்த்தான். அவரது கம்பீரமான நடையும் புள்ளிவிபரங்களோடு கூடிய அவரது வசனங்களும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளையும் யாராலும் அவ்வளவு எளிதில் கடந்து போக முடியாது. தற்போது கேப்டன், சினிமாவை விட்டு முழுமையாக விலகி உள்ள நிலையில் அவரது மகன் திரையுலகத்திற்கு வந்துவிட்டார்.

கேப்டனின் மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம் வசூல் ரீதியாக பெரிதாக வெற்றி பெறவில்லை என்றே கூற வேண்டும். இந்த நிலையில் தற்போது சண்முக பாண்டியன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் பெயர் மதுரை வீரன்.

- Advertisement -

இந்த படத்தை அன்பு என்ற இயக்குனர் இயக்கு வெறுக்கிறார். இதற்கு முன்பு அவர் வால்டர், ரேக்ளா போன்ற படங்களை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை டைரக்டர் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க விருக்கிறது. இந்த படம் முழுவதும் காட்டுக்குள் நடக்கும் ஒரு கதைக்களமாக அமையும் என்றும், பல திருப்புமுனை காட்சிகள் படத்தில் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியுள்ளது. பிரேமலதா விஜயகாந்த் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கேரளாவை சுற்றியுள்ள வனப்பகுதிகள், ஒரிசா மற்றும் தாய்லாந்தில் உள்ள வனப்பகுதிகள் என பல பகுதிகளில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த படம் குறித்த பல்வேறு தகவல்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிய வருகிறது சண்முகனின் ஆட்டத்தை பொறுத்திருந்து பார்ப்போம்

- Advertisement -

சற்று முன்