நடிகர் விஜய், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார். இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் இவர்தான். வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் இப்போது நடித்து வரும் விஜய் 68 படத்துக்கு அவர் பெறுகிற சம்பளம் ரூ. 200 கோடி ரூபாய். கடந்த லியோ படத்தில் விஜய் பெற்ற சம்பளம் ரூ. 125 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய், சினிமா பிரபலங்களின் வாரிசுதான், விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் கடந்த 1980, 90களில் மிக பிரபலமான டைரக்டர். ரஜினி, விஜயகாந்த் போன்றவர்களை ஹீரோவாக வைத்து படம் இயக்கியவர். அந்த காலகட்டத்திலேயே புரட்சிக்கரமான விஷயங்களை தைரியமான படமாக்கிய துணிச்சலான இயக்குநராக மற்றவர்களால் பாராட்டப்பட்டவர். தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஒரு மரியாதை, கவுரவம் உள்ளது.
அதே போல் விஜயின் அம்மா ஷோபா ஒரு பிரபல பாடகி. பட படங்களில் பாடியிருக்கிறார். நடிகர் விஜய் நடித்த படங்களில் கூட விஜயுடன் டூயட் பாடல்களை பாடியிருக்கிறார். அம்மா, மகன் இணைந்து இப்படி காதல் பாடல்களை பாடலாமா என்ற சர்ச்சை எழுந்ததால் அதன் பிறகு விஜயுடன் பாடுவதை தவிர்த்து விட்டார்.
விஜயின் அப்பா, அம்மா மட்டுமின்றி விஜயின் தாய்மாமா அதாவது ஷோபாவின் சகோதரர் எஸ்என் சுரேந்தர் மிக பிரபலமான ஒரு பாடகர். 1980களில் பல ஹிட் பாடல்களை பாடியவர். பூங்கதவே தாழ்திறவாய், மாமரத்து பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா போன்ற மிக இனிமையான பாடல்களை தந்தவர். நடிகர் மோகனின் குரலாக திரைப்படங்களில் பின்னணியில் ஒலித்தது எஸ்என் சுரேந்தரின் குரல்தான்.
அதுமட்டுமின்றி இப்போது விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லைகா புரெடக்சன் தயாரிக்கும் படத்தை இயக்க கமிட் ஆகி இருக்கிறார். 10 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை வேறலெவலில் ஜேசன் சஞ்சய் இயக்குவார் என தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில் விஜய் அம்மாவின் ஒரு வீடியோ செம வைரலாகி வருகிறது.
அதாவது சோனியா விக்ரம் என்ற நடிகையுடன் ஷோபா சந்திரசேகர் மிக அருகே கன்னத்தோடு கன்னம் ஒட்டியபடி சிரித்து ரசித்தபடி, ஷோ பியூட்டிபுல் ஷோ லகண்ட், ஜஸ்ட் லுக்கிங் லைக் எ வாவ்’ என்ற ஆங்கில வார்த்தைகளை கொண்ட பாடலை பாடி அதை, சோனியா விக்ரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் க்யூட்டாக ஷோபா, சோனியா ரியாக்ட் செய்திருப்பதால் அந்த ரீல்ஸ் இப்போது செம வைரலாகி வருகிறது.





