- Advertisement -
Homeபொழுதுபோக்குசிம்பு - வெற்றிமாறன் திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அப்டேட் வந்தாச்சு... கம்பீரமாக நடந்து வரும் எஸ் டி...

சிம்பு – வெற்றிமாறன் திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அப்டேட் வந்தாச்சு… கம்பீரமாக நடந்து வரும் எஸ் டி ஆர்… அடுத்த தரமான சம்பவம் காத்திருக்கு…

- Advertisement -

தமிழ் சினிமாவில் இதுவரை ஏழே ஏழு திரைப்படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார் வெற்றிமாறன். இதில் தனுஷ் உடன் மட்டும் இணைந்து அவர் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய நான்கு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் வெற்றியை பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

இதில் இரண்டாம் பாகத்திற்கு அடித்தளமிடும் வகையில் அவர் இயக்கிய திரைப்படம்தான் வடசென்னை. இந்த திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ் எங்கு சென்றாலும் சரி, அல்லது வெற்றிமாறன் எங்கு சென்றாலும் சரி ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி வடசென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது எடுக்கப்படும் என்பது பற்றிதான்.

- Advertisement -

ரசிகர்களின் இந்த பேரார்வத்திற்கு காரணம் அதன் முதல் பாகம்தான். ஒரு சாதாரண பழிவாங்கல் கதையை திரைக்கதை மூலம் எவ்வளவு சுவாரசியமாக கொடுக்கலாம் என்பதை வடசென்னை திரைப்படத்தின் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கியிருந்த வெற்றிமாறன், தேவையான இடங்களில் ஆக்சன் சீன்களை தூவி விட்டு திரையரங்குகளை கொண்டாட்ட களமாக்கினார்.

இதில் அன்பு என்றும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருந்தார் தனுஷ். அதேபோன்று அமீருக்கான ராஜன் கதாபாத்திரமும் மிக கனமாக எழுதப்பட்டிருந்தது. இப்படியான சூழலில் அதன் இரண்டாம் பாகம் எப்போது எடுக்கப்படும் என்ற கேள்விகளே சுற்றி சுற்றி வந்தபோது திடீரென சிம்புவுடன் கைகோர்த்து இருக்கிறார் வெற்றிமாறன். அப்படி என்றால் இது வட சென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகமா என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

- Advertisement -

இதற்கு வீடியோ வெளியிட்டு பதில் கொடுத்த வெற்றிமாறன், வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் என்றால் அது அன்பு என்னும் கதாபாத்திரத்தை வைத்துதான் நகரும் என்று தெளிவாக கூறினார். அதேசமயம் சிலம்பரசன் உடன் இணையப் போகும் திரைப்படம், வடசென்னை உலகில்தான் இருக்கும் என்றும் அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரங்களும் இதில் வருவார்கள் என தெரிவித்திருந்தார்.

இப்படியான சூழலில், படத்திலிருந்து ஒரு சிறிய அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு. அதில் மிரட்டும் இசையுடன், இருள் சூழ்ந்த ஒரு தெருவில் சிலம்பரசன் நடந்து வருவது போன்று காட்சி இடம் பெற்றுள்ளது. விரைவில் அப்டேட் வரும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சிலம்பரசனின் பெயரும் வடசென்னை திரைப்படத்தில் இடம் பெற்ற வடிவத்திலேயே உள்ளது. இதைக் கண்டு அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து இருக்கிறார்கள்.

- Advertisement -

சற்று முன்