- Advertisement -
Homeபொழுதுபோக்குவிரைவில் திருச்சியில் மாநாடு, அடுத்தக்கட்ட அறிவிப்புகளை வெளியிட தயாராகும் நடிகர் விஷால் - ரத்னம் படத்துக்கு...

விரைவில் திருச்சியில் மாநாடு, அடுத்தக்கட்ட அறிவிப்புகளை வெளியிட தயாராகும் நடிகர் விஷால் – ரத்னம் படத்துக்கு இப்படி ஒரு சோதனையா?

- Advertisement -

நடிகர் விஷால், தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக ஒரு கட்டத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த பல படங்கள் அப்போது மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. ரசிகர்களும் அவரது படங்களை வரவேற்றுக் கொண்டாடினர். குறிப்பாக திமிரு, சண்டக்கோழி, தாமிரபரணி, சிவப்பதிகாரம், நான் சிவப்பு மனிதன், அவன் இவன் போன்ற பல படங்களை சொல்லலாம்.

ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு விஷால் நடித்த படங்கள் என்றாலே ரசிகர்கள் தெறித்து ஓடும் அளவுக்கு அவரது படங்கள் தொடர்ந்து பிளாப் ஆகின. கடந்த 10 ஆண்டுகளாகவே அவரது படங்கள் சரியாக ஓடவில்லை. அதன்பிறகு கடந்தாண்டில் வெளியான மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

ஆனால் மார்க் ஆண்டனி படத்தில் விஷால் மட்டுமின்றி இரட்டை நாயகர்களில் ஒருவராக, நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்ஜே சூர்யாவும் நடித்திருந்தார். பொம்பள ஷோக்கு கேக்குதாடா பொம்பள ஷோக்கு என தோள்களை அசைத்து குலுக்கியபடி அவர் நடித்த ஒரு காட்சியை பார்க்கவே ரசிகர் கூட்டம் தியேட்டர்களில் அலைமோதியது. மார்க் ஆண்டனியின் மிகப்பெரிய வெற்றிக்கு நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா மிகப்பெரிய காரணமாக, பக்கபலமாக இருந்தார் என்பதே உண்மை.

இந்நிலையில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ள படம் ரத்னம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்த மாதம் இந்த படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் முதல் சிங்கிளாக டோண்ட் ஒர்ரி பாடல், கடந்த 10 நாட்களுக்கு முன் வெளியானது. தனது கடந்த படம் மார்க் ஆண்டனி 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த நிலையில், ரத்னம் படம் குறித்தும் பெரிய கவனத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்த விஷால் திட்டமிட்டுள்ளார்.

அதனால் ரத்னம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகப்பெரிய அளவில் மாநாடு போல நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் திருச்சியில் அடுத்த மாதம், ரத்னம் இசைவெளியீட்டு விழாவை பிரமாண்டமான மாநாடு போல நடத்தி, லோக் சபா தேர்தல் நேரத்தில், தன்னுடைய கெத்தை ரசிகர் கூட்டத்தில் காட்ட திட்டமிட்டுள்ளார்.

நடிகர் விஷால் அரசியல் ஆர்வம் உள்ளவர். ஏற்கனவே சென்னை ஆர்கே நகர் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்து, நிராகரிக்கப்பட்டவர். அரசியலில் குதிக்க முன்னோட்டமாக இந்த மாநாட்டை, இசை வெளியீட்டு விழாவாக நடத்த அவர் ஆலோசித்து வருகிறார். விஜய்க்கு கிடைக்கும் ஆதரவை, வரவேற்பை பார்த்து அதனால் தனக்கும் அப்படி ஒரு மாஸ் கிடைக்க ஆசைப்படுகிறார். ஆனால் விஷால் படங்களே ஓடாத நிலையில், அரசியலில் அவரது எதிர்காலம் என்னவென்பது காலம்தான் பதில் சொல்லும்.

சற்று முன்