நடிகர் வடிவேலு, தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக 1990களில் இருந்தவர். 20 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் சினிமாவில் அவர் நடித்த படங்களில் காமெடி மிகச் சிறப்பாக இருந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. ஹீரோக்களுக்கு இணையாக வடிவேலுவுக்கும் படத்தில் முக்கிய காட்சிகள், படம் முழுக்க வரும்படியான கேரக்டர்கள் தரப்பட்டன.
நடிகர் வடிவேலு தன்னுடன் அல்வா வாசு, செல்லதுரை, கொண்டல் ராவ், கிரேன் மனோகர், முத்துக்காளை உள்ளிட்ட காமெடி துணை நடிகர் பட்டாளத்தை வைத்துக்கொண்டு பல படங்களில், மிகச்சிறந்த காமெடி தந்து ரசிகர்களை மிகவும் சந்தோஷப்படுத்தினார். இதனால் ஒரு நாளைக்கு பத்து லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு அவரது இமேஜ் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தது.
இப்போதும் டிவி சேனல்களில் மணிக்கணக்கில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் மக்களின் மத்தியில் ரசித்து பார்க்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி படங்களில் வடிவேலு பேசிய வசனங்கள், இப்போதும் மீம்ஸ்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி, பலத்த பாராட்டை பெற்று வருகின்றன.
ஆனால் நடிகர் வடிவேலு ஒரு கட்டத்தில் தனக்கு கிடைத்த புகழ், செல்வாக்கால் தலைக்கனம் ஏறிய நிலையில் தன்னை வளர்த்து விட்ட சினிமாவையே, சினிமா சார்ந்தவர்களையே மதிக்காமல் நடந்து கொண்டு பலரையும் அவமரியாதை செய்தார். குறிப்பாக கேப்டன் விஜயகாந்த் தான் சின்ன கவுண்டர் படத்தில் நடிக்க வடிவேலுக்கு வாய்ப்பு கொடுத்தார். அவரையே எதிர்த்து பேசியதோடு பல இடங்களில் அவரை கிண்டலாக விமர்சித்து பேசி அவரை இழிவு படுத்தினார். ஆனாலும் கேப்டன் விஜயகாந்த் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
அதன் பிறகு இயக்குனர் ஷங்கரை பார்த்தால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எழுந்து நிற்கும் அளவுக்கு மரியாதைக்குரிய டைரக்டர் சங்கருடன் வடிவேலு பஞ்சாயத்து செய்தார். இப்படி தொடர்ந்து பல விஷயங்களில் கரடு முரடாக வடிவேல் நடந்து கொண்டதால், 10 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டார். இப்போது அவர் சினிமா இமேஜ் இழந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பின்றி இருந்து வருகிறார்.
இந்த சூழலில் இப்போது தற்போது நடிகர் வடிவேலு சன் டிவியில், டாப் குக் டூப்பு குக் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்கிறார். அந்நிகழ்ச்சியில் சமையல் கலை வல்லுனர்கள் வெங்கடேஷ் பட் தாமோதரன் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் வடிவேலு கேட்ட சம்பளத்தை பார்த்து, சன் டிவி நிர்வாகமே ஆடிப் போய்விட்டது. சன் டிவியையே விலைக்கு கேட்கும் அளவுக்கு, ஒரு பெரிய சம்பளத்தை கேட்டு அவர்களை அதிர செய்திருக்கிறார் வடிவேலு. சினிமாவில் நடிக்க இமேஜ் இல்லாத நிலையில், குறிப்பிட்ட ஒரு கணிசமான தொகையை பேசி இந்த நிகழ்ச்சியில் அவரை கலந்து கொள்ள சன்டிவி சம்மதிக்க வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





