- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் செய்த மிகப் பெரிய துரோகம், திடீரென அப்படி ஒரு முடிவு எடுத்த பிரபல இசையமைப்பாளர்,...

சிவகார்த்திகேயன் செய்த மிகப் பெரிய துரோகம், திடீரென அப்படி ஒரு முடிவு எடுத்த பிரபல இசையமைப்பாளர், என்னன்னு தெரியனுமா?

- Advertisement -

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வருகிறார். அவர் விஜய் தொலைக்காட்சியில் இருந்தபோது அவரது நகைச்சுவைகளுக்கு பல ரசிகர்கள் இருந்தார்கள். அதனை தொடர்ந்து சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன் தமிழ் ரசிகர்கள் பலரின் இதயங்களை கவர்ந்த ஹீரோவாக உருவானார்.

சிவகார்த்திகேயன் “மெரினா” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றி சிவகார்த்திகேயனை வேறு ஒரு லெவலுக்கு கொண்டு சென்றது. அதுமட்டுமல்லாது டி.இமானின் இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மாஸ் ஹிட் ஆனது.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி, சிவகார்த்திகேயன் குறித்த ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். “வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஊதா கலரு ரிப்பன் பாடல் பட்டி தொட்டி எங்கும் சிவகார்த்திகேயனை பிரபலப்படுத்தியது. அப்படிப்பட்ட ஒரு பாடலை கொடுத்த டி.இமானுக்கு சிவகார்த்திகேயன் காலம் முழுவதும் நன்றி கடன் பட்டிருக்க வேண்டும்.

ஆனால் சிவகார்த்திகேயன் அந்த நன்றியை மறந்து டி.இமானுக்கு துரோகம் செய்துவிட்டார். அதனால்தான் டி.இமான் இனிமேல் எப்போதும் சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைக்க கூடாது என்று முடிவெடுத்துவிட்டார். இந்த துரோகத்தை யாராலும் வெளியே சொல்ல முடியாது. அப்படிப்பட்ட ஒரு மிகப் பெரிய துரோகத்தை சிவகார்த்திகேயன் செய்துவிட்டார்” என்று பிஸ்மி அப்பேட்டியில் கூறியுள்ளாராம். ஆனால் சிவகார்த்திகேயன் டி.இமானுக்கு அப்படி என்ன துரோகத்தை செய்துவிட்டார் என்று பத்திரிக்கையாளர் பிஸ்மி அப்பேட்டியில் கூறாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்