- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா படத்தில் நடிக்கப் போவது இவர்கள்தான்... நஸ்ரியாவிற்கு பதில் அந்த நடிகைதான்...

சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா படத்தில் நடிக்கப் போவது இவர்கள்தான்… நஸ்ரியாவிற்கு பதில் அந்த நடிகைதான் இடம் பெறப் போகிறாராம்… வெய்ட்டிங்கே வெறி ஆகுதே…

- Advertisement -

தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். குடும்ப ஆடியன்ஸ்கள் ஏராளமானோர் அவருக்கு இருப்பதால் அவரது மார்க்கெட் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. அதிலும் அண்மையில் வெளியான அமரன் திரைப்படத்தின் மூலம் அவர் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார்.

 

- Advertisement -

தீபாவளிக்கு வெளியான இந்த திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி இருக்கிறது. இதனால் தயாரிப்பாளர் கமல்ஹாசன் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார். அமரன் திரைப்படத்தை பெரிய அளவில் யாரும் எதிர்பார்க்காத நிலையில், இப்படி ஒரு சாதனையை அந்த படம் ஈட்டி இருக்கிறது.

 

- Advertisement -

சொல்லப்போனால் திரையரங்குகளில் வார இறுதி நாட்களில் இன்னும் அமரன் திரைப்படம் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருப்பவர் சாய் பல்லவி தான். தனது அசத்தலான நடிப்பின் மூலம் அனைவரையும் கைத்தட்ட வைத்திருக்கிறார் சாய்பல்லவி.

 

குறுகிய காலத்திலேயே 300 கோடி ரூபாய் வசூல் என்னும் பிரம்மாண்ட சாதனையை சிவகார்த்திகேயன் படைத்திருப்பதால், வரும் காலங்களில் அவரது படத்திற்கு கடும் கிராக்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்ததாக அவர், டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் மீண்டும் இணைகிறார். ஜனவரி மாதம் இதன் சூட்டிங் தொடங்குகிறது.

 

குறுகிய காலத்தில் இந்த திரைப்படத்தை எடுத்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பிறகு 25வது திரைப்படத்திற்காக, சுதா கொங்கரா உடன் கைகோர்த்துள்ளார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே சுதா கொங்கரா சூர்யாவை வைத்து புறநானூறு படத்தை எடுக்க இருந்தார். ஆனால் அந்த திட்டம் கைவிடப்பட்டதால் தற்போது அதே கதை சிவகார்த்திகேயனுக்கு சென்றுள்ளது.

 

முதலில் இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து துல்கர் சல்மான் நஸ்ரியா விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிப்பதாக இருந்தது. தற்போது, அந்தப் பட்டியலை மாற்றி விட்டார் சுதா கொங்கரா. துல்கர் சல்மானுக்கு பதில் அதர்வா இதில் நடிக்கிறார். விஜய் வர்மாவுக்கு பதில் இடம் பெற்றிருக்கிறார் ஜெயம் ரவி. இதே போல் தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலாவும், புறநானூறு திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் பட்டியலால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள்.

 

- Advertisement -

சற்று முன்