- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மதராஸி திரைப்படத்தின் கதை இதுதான்... போடு கேட்கவே சூப்பரா இருக்குதே... அப்புறம் என்ன...

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மதராஸி திரைப்படத்தின் கதை இதுதான்… போடு கேட்கவே சூப்பரா இருக்குதே… அப்புறம் என்ன படம் ஹிட்டுன்னு அறிவிக்கலாமாடே…

- Advertisement -

அமரன் திரைப்படத்தை முடித்த கையோடு சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதனை தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லட்சுமி மூவி மேக்கர்ஸ் எடுப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் அறிவிப்பு வெளியாக அமரன் திரைப்படமும் ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டது. சொல்லப்போனால் சிவகார்த்திகேயனுக்கு இந்த திரைப்படம் மிக முக்கியமானதாகவும் அமைந்தது.

தன்னை ஒரு ஆக்சன் ஹீரோ என நிலை நிறுத்திக் கொள்ள, சிவகார்த்திகேயனுக்கு அமரன் திரைப்படம் உதவியது. இந்தப் படத்தை தொடர்ந்து, முருகதாஸ் உடனான திரைப்படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். இதில் அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் அறிவிக்கப்பட்டார். வழக்கம்போல் அனிருத் இதற்கு இசை அமைத்துள்ளார்.

- Advertisement -

நடிகர் விக்ராந்த், மலையாள நடிகர் பிஜுமேனன், துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யூட் ஜமால் உள்ளிட்டோரும் இதில் இடம் பெற்றுள்ளார்கள். இந்த திரைப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் போதே முருகதாஸுக்கு இந்தி திரை உலகில் இருந்து அழைப்பு வந்தது. சல்மான் கான் உடன் இணையும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இதை எடுத்து, மதராசி படத்தின் பணிகளை அப்படியே விட்டுவிட்டு இந்தி திரை உலகிற்கு சென்றார் முருகதாஸ். அங்கு சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்னும் திரைப்படத்தை இயக்கி வெளியிட அது படுதோல்வியை சந்தித்தது. இந்த இடைவேளையில், தனது பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கவனம் செலுத்த சென்று விட்டார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து தோல்வியோடு முருகதாஸ் தமிழ் பக்கம் திரும்ப, மீண்டும் மதராசி திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்டது. இந்த திரைப்படம் குறித்து அண்மையில் பேசிய முருகதாஸ், திரைக்கதையில் இது கஜினி போன்று இருக்கும் என்றும், ஆக்ஷனில் துப்பாக்கி போல இருக்கும் எனவும் கூறியிருந்தார். வரும் செப்டம்பர் 5ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் நிலையில், அதன் மையக்கரு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஒரு சிறப்பு படை குழுவுக்கும், வட இந்தியாவில் இருந்து வந்த மாஃபியா கும்பலுக்கும் இடையேயான ஆக்சன் களத்தைதான் மாபியா விவரிக்கிறது. இந்தப் போரில் காதல் நட்பு தியாகம் உள்ளிட்டவையும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது நிச்சயம் ஏ ஆர் முருகதாஸுக்கு திருப்புமுனையை கொடுக்கும் என்று அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள்.

- Advertisement -

சற்று முன்