தமிழ் சினிமாவில் இப்போது புது கலாசாரம் ஒன்று வெகுவேகமாக பரவி வருகிறது. அதாவது மல்டி ஸ்டார்ஸ் நடிக்கிற படமாக எடுத்து, அதை பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியிட்டு அதிகளவில் பல நூறு கோடிகளில் லாபம் பார்ப்பதுதான். ஆனால் இதில் படம் வெற்றி பெற்றால், தயாரிப்பாளருக்கு கொழுத்த லாபம். படம் பிளாப் ஆனால், ஹீரோக்களுக்கு மட்டுமே லாபம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது ஒரு மொழியில் எடுக்கப்பட்ட படத்தில் அந்த மொழியில் முன்னணி ஹீரோ மட்டுமே படத்தில் ஹீரோவாக, நடிப்பார். அவரே முதன்மை பாத்திரமாக இருப்பார். ஆனால் பான் இந்தியா படம் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழி படங்களே அதிகளவில் எடுக்கப்படுகின்றன.
இந்த படங்களை தயாரிக்க பெரிய பட்ஜெட் கதைகளை உருவாக்கின்றனர். இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அந்தந்த மொழி படங்களில் உள்ள முன்னணி நடிகர்களை இந்த படங்களில் நடிக்க வைத்தால்தான், மற்ற மொழிகளிலும் அந்த மொழி ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகர் என படம் பார்க்க வருவார்கள்.
அந்த வகையில்தான், ஜெயிலர், லியோ போன்ற படங்கள் மல்ட்டி ஸ்டார்ஸ் படங்களாக இருந்தது. விடாமுயற்சி படமும் அப்படித்தான் உருவாகி வருகிறது. குட்பேட் அக்லி, கூலி போன்ற பான் இந்தியா படங்களும் அந்த அடிப்படையில்தான் உருவாகின்றன. அந்த வகையில் விஜய் நடித்துள்ள த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படமும் மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதுதவிர பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், வைபவ், அஜ்மல் போன்றவர்களும் ஹீரோ நடிகர்கள்தான். அத்துடன் இதில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த், விவேக் வருகின்றனர். அத்துடன் சினேகா, மீனாட்சி சௌத்ரி, ரம்யா கிருஷ்ணன், லைலா என முன்னணி கதாநாயகிகளும் நடித்துள்ளனர். அவர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே அணி வீரர்களும் படத்தில் வருகின்றனர்.
இது மட்டுமின்றி கோட் படத்தில் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயனும் நடித்திருக்கிறார். திருவனந்தபுரத்தில் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடத்தப்பட்ட படப்பிடிப்பில், படத்தின் கிளைமேக்ஸ் எடுக்கப்பட்டுள்ளது. அந்த கிளைமேக்ஸில் இயக்குனர் வெங்கட்பிரபு வரும் காட்சியில்தான், முக்கிய ரோலில் சிவகார்த்திகேயனும் வருகிறார். இப்படி படத்தில் பல ஹீரோக்கள் இருப்பதால், அவர்களும் முக்கிய ரோலில் வருவதால், உண்மையில் படத்தின் உண்மையான ஹீரோ விஜய்தானா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





