- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென அஜித்குமாரை சந்தித்து மனம் நெகிழ்ந்த எஸ் ஜே சூர்யா... அதன் பின்னணியில் இருப்பது இந்த...

திடீரென அஜித்குமாரை சந்தித்து மனம் நெகிழ்ந்த எஸ் ஜே சூர்யா… அதன் பின்னணியில் இருப்பது இந்த விஷயம்தான்… அப்போ அஜித் ரசிகர்களுக்கு அது வரப்பிரசாதம்தான்…

- Advertisement -

தற்போது ஒரு நடிகராக பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பவர் எஸ் ஜே சூர்யா. மாநாடு திரைப்படத்தின் மூலம் கம் பேக் கொடுத்த அவர், தனது அசுரத்தனமான நடிப்பினால் ரசிகர்களை இழுத்து வருகிறார். எப்படி ஒரு காலத்தில் இயக்கத்தின் மூலம் ரசிகர்களை கட்டி போட்டாரோ அதேபோல் எஸ் ஜே சூர்யா தற்போது தனது நடிப்பின் மூலம் உச்சத்திற்கு சென்றிருக்கிறார்.

 

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன்பு இதே நடிப்பினால் தான் அவர் விமர்சனத்திற்கு ஆளானார். ஒரே மாதிரி நடித்து அவர் சலிப்பூட்டுவதாக பலர் கூறி வந்தார்கள். இந்த சமயத்தில் ஏ ஆர் முருகதாஸின், ஸ்பைடர் திரைப்படத்தில் இசக்கி கதாபாத்திரத்தில் நடித்து தூள் கிளப்பி இருந்தார் எஸ் ஜே சூர்யா.

 

- Advertisement -

அது மட்டுமல்லாமல் மாநாடு திரைப்படமும் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. முதல்முறையாக ஹீரோவுக்கு ஒரு படிக்கு மேல், வில்லன் கதாபாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் கைதட்ட ஆரம்பித்தார்கள். இப்படி இவர் நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்க, அவரின் ஆரம்பகட்ட பயணம் அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை.

 

கிழக்கு சீமையிலே உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த எஸ் ஜே சூர்யா, வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த உல்லாசம் திரைப்படத்தின் போது அவர் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். தொடர்ந்து ஆசை திரைப்படத்திலும் அவர் வேலை பார்க்க அப்போதுதான், அஜித்திடம் இந்த திரைப்படத்தின் குறித்த கதையை பேசியிருக்கிறார்.

 

அஜித்தும் உடனடியாக அவருக்கு வாய்ப்பு கொடுக்க, வாலி திரைப்படம் வெளியானது. தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தொட்டிறாத கதாபாத்திரத்தை செதுக்கியிருந்தார் எஸ் ஜே சூர்யா. அதுவும் இரண்டு அஜித் என அனைத்து விஷயங்களும் பக்காவாக இருக்க வாலி திரைப்படம் வாகை சூடியது. இதன் பிறகு அஜித் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் இணையவே இல்லை.

 

இந்த சூழலில் தான் தற்போது இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளார்கள். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் எஸ் ஜே சூர்யா எனது வழிகாட்டியை பார்த்ததில் மகிழ்ச்சி என்று கூறி இருக்கிறார். விடாமுயற்சியின் இறுதி கட்டப் பணிகள் ஹைதராபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்க, அங்கு வேறு ஒரு படத்தின் சூட்டிங் பணிக்காக சென்ற எஸ் ஜே சூர்யா அஜித்தை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அதேசமயம் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் அவர் ஒப்பந்தமாகி இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

- Advertisement -

சற்று முன்