- Advertisement -
Homeபொழுதுபோக்கு26 ஆண்டுகளுக்கு பிறகு பாடகரை கொண்டாடும் ரசிகர்கள்… இணையத்தில் வைரலான பாடல் - இது தரமான...

26 ஆண்டுகளுக்கு பிறகு பாடகரை கொண்டாடும் ரசிகர்கள்… இணையத்தில் வைரலான பாடல் – இது தரமான சம்பவமா இருக்குதே?

- Advertisement -

நடிகர் குணால் நடிகை சோனாலி பிந்த்ரே நடித்த படம் காதல் தேசம். இயக்குனர் கதிர் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்தான் ரோஜா ரோஜா. இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உன்னிகிருஷ்ணன் குரலில் வெளிவந்த இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற பாடலாகும்.

கடந்த 1999ம் ஆண்டில், அதாவது 26 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த காதலர் தினம் படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் காதலர்கள் மத்தியில் இன்றும் கொண்டாடப்படும் ஒரு சூப்பர் ஹிட் படமாக இருந்து வருகிறது. காதலர் தினம் படத்தில் இடம்பெற்ற ரோஜா ரோஜா என்ற பாடல் இன்று வரை ரசிக்கப்படுகிற ஒரு சிறந்த பாடலாக இருந்து வருகிறது. ரோஜா ரோஜா பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் இதுவரை மவுசு குறையவில்லை.

- Advertisement -

கடந்த சில நாட்களாக இளைஞர் ஒருவர் ரோஜா ரோஜா பாடலை மேடை கச்சேரி ஒன்றில் பாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மிகவும் கேஷூவலாக அதே நேரத்தில் மிக சிறப்பாக அந்த இளைஞர் பாடுகிறார்.
இந்த வீடியோவை பார்க்கும் பலரும் ஆச்சரியப்பட்டு அந்த வீடியோவை வைரலாகி வருகிறார்கள். பலரும் அந்த பாடலை ரசித்து ஷேர் செய்கின்றனர்.

இந்நிலையில் வீடியோவில் ரோஜா ரோஜா பாடலைப் பாடிய அந்த இளைஞரைப் பற்றி விவரம் வெளியாகி உள்ளது. அந்த இளைஞருடைய பெயர் சத்யன் மகாலிங்கம். இவர் பிரபல பின்னணி பாடகராக இருக்கிறார். துப்பாக்கி படத்தில் வந்த குட்டி புலி கூட்டம், கழுகு படத்தில் வந்த ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம், மாற்றான் படத்தில் வந்த தீயே தீயே போன்ற பல பாடல்களை சத்யன் மகாலிங்கம் பாடியிருக்கிறார்.

- Advertisement -

ஆனால் சிறந்த பாடகரான சத்யன் மகாலிங்கத்துக்கு அதிக அளவில் சினிமாவில் பாடல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து இசையில் தனது திறமையை வளர்த்துக் கொண்டு வருகிறார் சத்யன் மகாலிங்கம். இந்த சூழ்நிலையில்தான் அவர் பாடிய ரோஜா ரோஜா பாடல் பழைய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த வீடியோவுக்கு ரியாக்சன் செய்துள்ளார்.

அதே போல் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், கண்டிப்பாக இவருக்கு பல படங்களில் பாட வாய்ப்பு கிடைக்கும். இவர் தமிழ் சினிமாவில் இன்னொரு ரவுண்டு வருவார் என்றும் கூறி வருகின்றனர். திறமை என்பது எவ்வளவு நாள் மறைந்து இருந்தாலும் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வந்தே தீரும். அந்த வகையில் பாடகர் சத்யன் மகாலிங்கமும் பல முன்னணி படங்களில் பாடி நிச்சயமாக முன்னணி பாடகராக புகழ் பெறுவார் என்றும் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்