- Advertisement -
Homeபொழுதுபோக்குவில்லன் நடிப்பில் மிரட்டிய மலையாள நடிகர் சௌபிர் சாஹிர்… குவிகிறது பாராட்டு - கூலி படத்தில்...

வில்லன் நடிப்பில் மிரட்டிய மலையாள நடிகர் சௌபிர் சாஹிர்… குவிகிறது பாராட்டு – கூலி படத்தில் நிஜ ஹீரோவே அவர்தானோ…?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு என்ன வரவேற்போ அதே வரவேற்பு வில்லனுக்கும் ரசிகர்களிடம் கிடைத்து வருகிறது. அது எம்ஜிஆர் காலத்திலேயே நடந்திருக்கிறது. எம்ஜிஆரை எதிர்ப்பது எம்என் நம்பியாராக இருந்தால்தான் படம் விறுவிறுப்பாக இருக்கும். அதன்பிறகு ரஜினிக்கு ரகுவரன், கமலுக்கு நாசர், விஜயகாந்துக்கு ராதாரவி என பல படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றன.

இன்று வெளியான கூலி படத்தில் பிரதான சீனியர் வில்லன் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா, அடுத்த ஜூனியர் வில்லன் மலையாள நடிகர் சௌபிர் சாஹிர் என்று கதைப்படி இருந்தாலும் பல காட்சிகளில் சீனியர் வில்லனையே தூக்கி சாப்பிட்டது ஜூனியர் வில்லன் சௌபிர் சாஹிர்தான். இந்த படத்தில் அவரது வில்லன் நடிப்பு ரசிகர்களை ஒருவிதத்தில் மிரட்டி விட்டது.

- Advertisement -

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்தது மலையாள நடிகர் விநாயகன்தான். அந்த படத்தில் அவரது மிரட்டலான நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதே போல் கூலி படத்திலும் மலையாள நடிகர் சௌபிர் சாஹிர் நடிப்பு ரசிகர்களை பேச வைத்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் மிக நேர்த்தியான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

கடந்தாண்டில் வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் நடித்தவர்தான் சௌபிர் சாஹிர். இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தின் தயாரிப்பாளரும் சௌபின் சாஹிர்தான். மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் பாதாளத்தில் விழுந்த தனது நண்பனை, கயிறு கட்டி உள்ளே இறங்கி காப்பாற்றி வெளியே கொணடு வரும் ஒரு அற்புதமான கேரக்டரில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றிருந்தார்.

- Advertisement -

இப்போது கூலி படத்திலும் தயாளன் என்ற ஹார்பர் கேங்ஸ்டர் வில்லனாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்று விட்டார். கூலி படத்தின் கதை முழுக்க முழுக்க சௌபின் சாஹிரை சுற்றியே நடக்கிறது. அவரது வில்லத்தனம்தான் படத்தில் அடுத்தடுத்த திருப்பங்களை கொண்டு வருகிறது. படத்தில் அவரது கேரக்டர் இல்லை என்றால் 10 நிமிடங்கள் கூட தொடர்ந்து படம் ஓடாது என்பது போல்தான் கதைக்களம் உள்ளது.

குறிப்பாக ரஜினிக்கே சவால் விடும் வில்லனாக பல காட்சிகளில் படத்தை சுவாரசியமாக கொண்டு செல்வதே சௌபிர் சாஹிர் கேரக்டர்தான். நாகர்ஜூனா அவ்வப்போது பெரிய வில்லனாக பில்டப் செய்து காட்டப்பட்டாலும் கடைசி வரை ரஜினியை கதற விடுவது சௌபிர் சாஹிர்தான். ஆக மொத்தத்தில் தமிழ் சினிமாவுக்கு ஒரு அற்புதமான வில்லன் மலையாள சினிமாவில் இருந்து கிடைத்திருக்கிறார். தமிழில் இனி பல படங்களில் சௌபிர் சாஹிரை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

சற்று முன்