- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் மகளுக்கு இப்படி ஒரு ஆசையா? வெளிப்படையாக சொல்லிவிட்ட மகள் சௌந்தர்யா - இதுக்கு...

ரஜினிகாந்த் மகளுக்கு இப்படி ஒரு ஆசையா? வெளிப்படையாக சொல்லிவிட்ட மகள் சௌந்தர்யா – இதுக்கு அவர் சம்மதிப்பாரா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா. இருவருமே இயக்குநர்களாகி படங்களை இயக்கி வருகின்றனர். இதில் ஐஸ்வர்யா இதுவரை மூன்று படங்களை இயக்கி இருக்கிறார். தன் கணவர் தனுஷை வைத்து 3 என்ற படத்தையும், கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடித்த வை ராஜா வை என்ற படத்தையும் இயக்கினார். இதில் 2 படங்களுமே பிளாப் ஆகின.

அடுத்து கடந்த மாதத்தில், ஐஸ்வர்யா இயக்கத்தில் 3வது படமாக லால் சலாம் படம் வெளியானது. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் இரட்டை நாயகர்களாக நடித்திருந்தனர். இதில் கேமியோ ரோலில் மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தமிழ் நாட்டில், ரிலீஸ் நாளில், ரஜினிகாந்த் படம் ஒரு காட்சி கூட ஹவுஸ்புல் ஆகவில்லை, என்ற சாதனையை படைத்தது.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் என்ற வெற்றிப்படத்தை தந்துவிட்டு, வேட்டையன் என்ற வெற்றிப்படத்தை தர கடுமையாக உழைத்து வருகிறார். ஆனால் அவரை லால்சலாம் படத்தில் நடிக்க வைத்து மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பிளாப் படம் தந்துவிட்டதால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்த், தனது இளைய மகள் சௌந்தர்யா இயக்கும் ஒரு படத்திலும் கேமியோ ரோலில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இவர் ஏற்கனவே ரஜினியை கார்ட்டூன் படமாக காட்டி கோச்சடையான் என்ற தோல்வி படத்தை தந்தவர். இப்போது ராகவா லாரன்ஸ்சை ஹீரோவாக வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். இந்த படத்துக்கான திரைக்கதையை ராகவா லாரன்ஸ் எழுதியிருக்கிறார்.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் மகள்கள் இருவரும் படங்களை டைரக்ட் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இதுவரை ஐஸ்வர்யா எடுத்த 3 படங்களும் பிளாப் ஆன நிலையில், சௌந்தர்யா இயக்கிய படமும் ஓடவில்லை. இந்த சூழலில் மீண்டும் ஐஸ்வர்யா ஒரு படமும், சௌந்தர்யா ஒரு படமும் இயக்குகின்றனர். ரஜினிகாந்த் சொந்த தயாரிப்புக்கு தயாராக இல்லாத நிலையில், தயாரிப்பு நிறுவனங்களை பிடிக்க சகோதரிகள் படாதபாடு பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா, சில ஆண்டுகளுக்கு முன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற போது பேசியது இப்போது வைரலாகி வருகிறது. அதாவது நீங்கள் சினிமாவில் நாயகியாக நடித்தால் யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு நடிகர் அஜீத்குமாருடன் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார். சூப்பர் ஸ்டார் மகளே, ஏகேவுக்கு தான் ரசிகை என, அஜீத்குமார் ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றறனர்.

- Advertisement -

சற்று முன்