- Advertisement -
Homeபொழுதுபோக்குபடத்தில் ரஜினிகாந்த் பாடிய அந்த பாடலை பாடி முடிக்க பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் 8 மணி...

படத்தில் ரஜினிகாந்த் பாடிய அந்த பாடலை பாடி முடிக்க பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் 8 மணி நேரம் எடுத்துக்கொண்டாரா? – பாடும் நிலா எஸ்பிபி பாடத் திணறிய ஒரு பாடலும் இருக்கிறதா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசைத்துறையில் பாடகர்களாக ஜொலித்தவர்கள் பலருண்டு. அதில் டிஎம் சௌந்தர்ராஜன், பிபி ஸ்ரீனிவாஸ், எஸ்பி பாலசுப்ரமணியம், மனோ, கேஜே ஜேசுதாஸ், அருண்மொழி, சங்கர் மகாதேவன் என பலரும் பாடகர்களாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்தவர்கள்.

அதிலும் குறிப்பாக எஸ் பி பாலசுப்ரமணியம், பல ஆயிரம் பாடல்களை பாடியவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் மிகச் சிறந்த பாடல்களை பாடியவர். எம்ஜிஆர் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோருக்கு பாடிய எஸ்பி பாலசுப்ரமணியம், பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு பல நூற்றுக்கணக்கான பாடல்களை பாடி இருக்கிறார்.

- Advertisement -

பிறகு மோகன், பார்த்திபன், பிரபு, கார்த்திக், அர்ஜூன், விஜயகாந்த், முரளி, சரத்குமார், ஆனந்தபாபு, சரத்பாபு, ரகுமான் என பல முன்னணி நடிகர்களுக்கு பாடிய எஸ்பிபி, இப்போது விஜய், அஜீத்குமார், விக்ரம், சூர்யா, தனுஷ் போன்றவர்களுக்கும் பாடியிருக்கிறார். இப்படி மூன்று தலைமுறை கண்ட பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கேளடி கண்மணி, சிகரம், காதலன், ப்ரியமானவளே போன்ற சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

சில படங்களில் நடித்தாலும் பாடகராக மட்டுமின்றி நடிப்பிலும் எஸ்பி பாலசுப்ரமணியம் அசத்தி இருக்கிறார். அதே நேரத்தில் பாடகராகவும் எஸ்பிபி பாடிய பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக இளைய நிலா பொழிகிறதோ, இளமை இதோ இதோ, ஒருவன் ஒருவன் முதலாளி, ராஜாவுக்கு ராஜா நான்டா, நானாக நானில்லை தாயே, போவோமா ஊர்கோலம் என பல பாடல்களை சொல்ல முடியும்.

- Advertisement -

எப்பேர்ப்பட்ட பாடலாக இருந்தாலும் எஸ்பிபியை பொறுத்த வரை சில நிமிடங்களில் கிரகித்து உள்வாங்கி அம்சமாக பாடலாக பாடி விடுபவர். அதனால் இசையமைப்பாளர்கள் பலரும் எஸ்பிபியை பாட வைப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். ஏனெனில் எத்தனை சிக்கலான பாடல் வரிகளாக இருந்தாலும் எஸ்பிபி அனாயசமாக பாடி விடுவதில் வல்லவர்தான்.

ஆனால் எஸ்பிபி பாட திணறிய ஒருபாடல் உண்டு என்றால், அது சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் பாடும் ‘அத்திந்தோம் திந்தியும் தந்தோம்’ என்ற பாடல்தான். இந்த பாடலை, வித்யாசாகர் இசையில் பாட மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் பாட முடியாமல் சிரமப்பட்ட எஸ்பிபி, வீட்டுக்குச் சென்ற பிறகு ஏதோ யோசித்திருக்கிறார். சட்டென அவருக்கு பொறி தட்டிய பிறகு மீண்டும் ஸ்டுடியோவுக்கு வந்த எஸ்பிபி, இப்போதுதான் இந்த பாடல் புரிகிறது என்று அந்த பாடலை மிக சுலபமாக ஒரே டேக்கில் பாடிக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்