- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி அங்கு நான் போக மாட்டேன், எப்படியும் அந்த இடத்தை நான் பிடித்தே தீருவேன் -...

இனி அங்கு நான் போக மாட்டேன், எப்படியும் அந்த இடத்தை நான் பிடித்தே தீருவேன் – சவால் விடும் விக்ரம் பட நாயகியின் கனவு நிறைவேறுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஜெயித்த பெரிய முன்னணி நடிகைகள் பலரும் பிற மொழிகளில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர்கள்தான். அது எம்ஜிஆர் சிவாஜி கணேசன் காலத்தில் இருந்து ரஜினி கமல்ஹாசன் நடித்த போதும் இப்போது விஜய் அஜீத்குமார் நடிக்கும் காலத்திலும் அது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

குறிப்பாக தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் மொழிகளை சேர்ந்த பல நடிகைகளில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்திருக்கின்றனர். சரோஜா தேவி லதா கேஆர் விஜயா ஜெயலலிதா துவங்கி ராதா அம்பிகா ரேவதி அமலா குஷ்பு மீனா ரம்பா தேவயானி ரோஜா நக்மா ஜோதிகா மட்டுமின்றி கீர்த்தி சுரேஷ் தமன்னா பூஜா ஹெக்டே ராஷ்மிகா மந்தனா என இந்த பிற மாநில நடிகைகள் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

தங்களது சொந்த மொழி படங்களை காட்டிலும் தமிழில் நடிக்க மற்ற மொழி நடிகைகள் ஆர்வம் காட்ட அதிக காரணம், தமிழில் நடித்தால் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற முடிகிறது. தவிர மற்ற மொழிகளை காட்டிலும் தமிழில் கதாநாயகிக்கு கதையில் முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது. நடிப்பை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு இருக்கிறது. சம்பளமும் அதிகமாக கிடைக்கிறது.

அத்துடன் ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் என உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடிக்கும் போது அந்த படங்கள் பிளாக்பஸ்டர் படங்களாக அமைவதால், ஓரிரு படங்களிலேயே உச்சத்துக்கு அந்த நடிகைகளின் இமேஜ் போய்விடுகிறது. அடுத்து பெரிய நடிகர்களின் படங்களின் நடிக்க வாய்ப்புகள் குவிகிறது. சம்பளமும் பலமடங்கு அதிகரித்து விடுகிறது.

அதனால் கேஜிஎப் படத்தில் நடித்த கன்னட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தமிழில் நம்பர் 1 இடத்தை பிடித்தே தீருவது என்ற தீவிர முனைப்பில் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கோப்ரா என்ற படத்தில் நடிகர் விக்ரமுக்கு அவர் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெறாததால் ஸ்ரீநிதி ஷெட்டி பலத்த ஏமாற்றம் அடைந்தார்.

இப்போது ஏகே 64 படத்தில் நாயகியாக நடிக்க கமிட் ஆகியிருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி தமிழில் இந்த ரீ என்ட்ரி மூலம் முக்கிய இடத்தை பிடிக்க ஆர்வம் காட்டுகிறார். இந்த முறை கர்நாடகாவுக்கு திரும்பிச் செல்ல மாட்டேன். தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தை பிடித்தே தீருவேன் என்றும் கூறியிருக்கிறார். ஏற்கனவே கன்னட சினிமாவில் இருந்துதான் ராஷ்மிகா மந்தனா பிரியங்கா மோகன் ருக்மணி வசந்த் ஆகியோர் தமிழுக்கு வந்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்