- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த நடிகருக்கு சொந்த ஊரிலேயே இமேஜ் இல்லே… அவரை எதுக்கு வில்லனாக போட்டாங்க? - ஆதங்கப்படும்...

அந்த நடிகருக்கு சொந்த ஊரிலேயே இமேஜ் இல்லே… அவரை எதுக்கு வில்லனாக போட்டாங்க? – ஆதங்கப்படும் தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

பான் இந்தியா படங்கள் என்றால், இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என பிற மொழிகளை சேர்ந்த முன்னணி நட்சத்திர நடிக்கும் படம்தான் என்ற தவறான புரிதல் பலரிடம் இருக்கிறது. உண்மையில் பான் இந்தியா படம் என்றால், எல்லா மொழிகளிலும் ஒரு படம் ஏற்றுக்கொள்ளப்படும் விதமாக தொழில்நுட்பத்தில், கதை திரைக்கதையில் இருக்க வேண்டும் என்பதுதான்.

அப்படிதான் கன்னடத்தில் வெளியான காந்தாரா படம் அதன்பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பிறமொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த ரிஷப் ஷெட்டியை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதுவரை யார் என்றே தெரியாது. ஆனால் அந்த படமும் கதைக்களமும் நடிப்பும் அந்த படத்தை ஜெயிக்க வைத்தது.

- Advertisement -

அப்படிப்பட்ட படங்கள்தான் பான் இந்தியா படங்கள் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால் கூலி படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா இந்தி நடிகர் அமீர்கான் மலையாள நடிகர் சௌபிர் சாஹிர் கன்னட நடிகர் உபேந்திரா போன்றவர்கள் நடிக்க வைக்கப்பட்டு இருந்தனர். கேரக்டரே இல்லாமல் அவர் இந்த படத்தில் வந்து சென்றனர்.

இதில் விதிவிலக்காக மலையாள நடிகர் சௌபிர் சாஹிர் மட்டுமே சிறப்பான நடிப்பை தந்திருந்தார். பிரதான வில்லனாக நடித்திருந்த நாகர்ஜூனா நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. மாஸ் வில்லனாக அவர் படத்தில் இருந்தும் அவர் வரும் காட்சிகளும் அவரது வசனங்களும் ரசிகர்களின் மனதில் நிற்கவில்லை.

- Advertisement -

ஏற்கனவே தமிழில் உதயம் இதயத்தை திருடாதே ரட்சகன் தோழா குபேரா போன்ற படங்களில் நாகர்ஜூனா நடித்திருந்தும் அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. குபேரா படத்தில் தனுஷூடன் அவர் நடித்திருந்த போதும், தெலுங்கில் தான் அந்த படம் பெரிய வெற்றியை பெற்றதே தவிர, தமிழில் நாகர்ஜூனா நடிப்பு ரசிகர்களிடம் எடுபடவில்லை.

தெலுங்கில் இருந்து நிறைய பான் இந்தியா படங்கள் உருவாகின்றன. ஆனால் அந்த படங்களிலேயே தெலுங்கு சினிமா உலகம் நடிகர் நாகர்ஜூனாவை கண்டுகொள்வதில்லை. அவருக்கு நடிக்க வாய்ப்பு தருவது இல்லை. சொந்த மொழி படங்களிலேயே அவருக்கு பெரிய இமேஜ் இல்லை. அப்படி இருக்கும் போது தமிழில் நடிகர் நாகர்ஜூனாவை கூலி போன்ற முக்கிய படத்தில் அவரை வில்லனாக நடிக்க வைத்ததே தவறு என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்