- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யாவின் அந்த செயலால் உச்சக்கட்ட கோபத்துக்கு போன இயக்குனர் சுதா கொங்காரா - விக்ரம் படத்தை...

சூர்யாவின் அந்த செயலால் உச்சக்கட்ட கோபத்துக்கு போன இயக்குனர் சுதா கொங்காரா – விக்ரம் படத்தை இயக்க முடிவெடுக்க முக்கிய காரணமே அதுதான்!

- Advertisement -

நடிகர் சூர்யாவின் திரை பயணத்தில், சூரரைப் போற்று மிக முக்கியமான படமாக அமைந்தது. அந்த படத்தை இயக்கியவர் சுதா கொங்காரா. அடுத்து சூர்யாவை வைத்து புறநானூறு என்ற படத்தை சுதா கொங்காரா இயக்குவதாக இருந்தது. இதற்கான டைட்டில் அறிமுக விழாவும் நடத்தப்பட்டது. ஆனால் அந்த படம் டிராப் ஆகி விட்டது.

இதற்கு முக்கிய காரணம், நடிகர் சூர்யாதான். இந்தி எதிர்ப்பை மையமாக கொண்ட இந்த கதையில், பல மாற்றங்களை, திருத்தங்களை சூர்யா செய்யச் சொன்னது இயக்குனர் சுதா கொங்காராவுக்கு பிடிக்கவில்லை. ஜோதிகா இந்தி பேசுபவர், சூர்யா மும்பையில் குடும்பத்துடன் செட்டிலானவர். இந்தி படங்களிலும் கமிட் ஆகி வருகிறார்.

- Advertisement -

இந்த சூழலில், இந்தியை எதிர்க்கும் படத்தில் எப்படி நடிக்க முடியும் என்பதால், அந்த படத்தின் போக்கையே மாற்றும் விதமாக அவர் பல திருத்தங்களும், மாற்றங்களும் சொன்னதால் சுதா கொங்காரா வெறுத்துப் போய் இந்த படமே பண்ண வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து, இருவரும் கூட்டாக ஒரு சமாளிப்பு அறிக்கை கடந்த 2 மாதங்களுக்கு முன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

எனினும் படத்தை எப்படியாவது டிராப் செய்யாமல் துவங்க வேண்டும் என படத்தின் கதை வசனகர்த்தா மதுரை எம்பி சு வெங்கடேசன் உள்ளிட்டோர் முனைப்பு காட்டியதால், நான்கைந்து முறை இதுகுறித்து சூர்யா – சுதா கொங்காரா தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தியும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

- Advertisement -

இந்த சூழலில், நடிகர் சூர்யா ஒரு நாவலை சுதா கொங்காராவிடம் கொடுத்து, இதை படமாக எடுங்கள் என்று சமீபத்தில் கூறியிருக்கிறார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற சுதா கொங்காரா, இனிமேல் சூர்யா படத்தை எக்காரணம் கொண்டும் இயக்கி விடக் கூடாது என்ற தீர்மானத்துக்கே வந்திருக்கிறார்.

மேலும் அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன், விக்ரம் இருவருமே தங்களுக்காக படம் பண்ணுமாறு சுதா கொங்காராவிடம் தனித்தனியாக அணுகியுள்ளனர். இதில் விக்ரமை தேர்வு செய்த சுதா கொங்காரா, விரைவில் அவரது நடிப்பில் படத்தை இயக்க உள்ளார். அது புறநானூறு கதையா, வேறு கதையா என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் மாஸ் படமாக உருவாக்குவார் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

சற்று முன்