- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை 2 ரிலீஸ் தேதி அறிவிப்பால் நொந்துபோன இயக்குனர் ஷங்கர், நடிகர் சூர்யா - அப்போ...

விடுதலை 2 ரிலீஸ் தேதி அறிவிப்பால் நொந்துபோன இயக்குனர் ஷங்கர், நடிகர் சூர்யா – அப்போ வாடிவாசல் படமும் வெயிட்டிங் லிஸ்ட்டுல மறுபடி வந்துடுச்சா?

- Advertisement -

நடிகர் சூரி காமெடி நடிப்பில் இருந்து கதாநாயகன் இமேஜூக்கு மாறிய படம் விடுதலை. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய இந்த படம் வெளியாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலான நிலையில், இன்னும் 2ம் பாகம் ரிலீஸ் ஆகவில்லை. படப்பிடிப்பும் நடந்துக்கொண்டே இருக்கிறது. இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இதுவரை வெற்றிமாறன் எடுத்துள்ள படத்தின் புட்டேஜ் 6.5 மணி நேரத்துக்கு மேல் உள்ள நிலையில், மேலும் 2 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். அதனால் விடுதலை 2, விடுதலை 3, விடுதலை 4 என விடுதலை படம் 4 பாகங்களாக வெளிவந்தால் மட்டுமே அந்த படம் முழுமையடைய வாய்ப்புள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இன்று விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதி வருகிற டிசம்பர் மாதம் 20ம் தேதி என அறிவித்துள்ளனர். அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் இந்த படத்தை வெளியிடுகின்றனர். இந்த படத்துக்கு பிறகு விடுதலை 3, விடுதலை 4 படங்கள் அடுத்த சில ஆண்டுகளில் வெளியிட வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண், கியாரா அத்வானி நடித்த படம் கேம் சேஞ்சர். இந்த படத்தை வருகிற டிசம்பர் மாதம் 20ம் தேதி வாக்கில், கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் வெளியிட ஷங்கர் திட்டமிட்டு இருந்தார். இப்போது அந்த நேரத்தில் விடுதலை 2 படம் வருவது தனது படத்தின் வசூலை பாதிக்கும் என்ற நிலையில் உள்ளார்.

- Advertisement -

அடுத்து வருகிற அக்டோபர் 10ம் தேதி சூர்யா நடித்த கங்குவா படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், அந்த நாளில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் ரிலீஸ் ஆகிறது. அதனால் கங்குவா படத்தின் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். அடுத்து தீபாவளி படங்கள் ரிலீஸ் ஆவதால் அடுத்த டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் கங்குவா ரிலீஸ் என்ற ஒரு முடிவு இருந்தது.

இப்போது கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 வருவதால், அந்த படமே நமக்கு போட்டியாக அமைந்து விடும் என்ற கலக்கம் கங்குவா படக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் விடுதலை 3, விடுதலை 4 என வெற்றிமாறன் அந்த படத்தின் தொடர் படப்பிடிப்பில் தீவிரம் காட்டுவதால் சூர்யா நடிப்பில் உருவாகும் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங்கும் இன்னும் பல மாதங்கள் தள்ளிப் போக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சூர்யா கடும் அப்செட்டில் இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்