கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கங்குவா திரைப்படத்திற்காக மட்டுமே செலவழித்தார் சூர்யா. சிறுத்தை சிவா இயக்கிய இந்த திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமான முறையில், 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.
சிறுவனை மையப்படுத்தி முந்தைய காலத்திற்கும் தற்போதைய காலத்திற்கும் இடையேயான இணைப்பை இந்த திரைப்படத்தில் காட்டியிருந்தார் சிறுத்தை சிவா. மிகப்பெரும் எதிர்பார்ப்பில் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் கங்குவா திரைப்படம் வெளியானது.
ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கங்குவா திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை. குறிப்பாக படத்தின் திரைக்கதை நன்றாகவே இல்லை என்று கமெண்ட் செய்தனர் ரசிகர்கள். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் பேசியதை வைத்து ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
இந்த படம் வெளியாக இருந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய சூர்யா, கங்குவா திரைப்படத்தை திரையரங்குகளில் அனைவரும் வாயை பிளந்து கொண்டு பார்ப்பார்கள் என்று கூறியிருந்தார். அந்த ஒரு வீடியோவை வைத்து சூர்யாவை பலரும் கலாய்க்க ஆரம்பித்தனர். இதே போல் கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஞானவேல் ராஜா, இந்த டிக்கெட்டை அனைவரும் வைத்திருங்கள் டிசம்பர் மாதம் வெற்றி விழாவில் சந்திப்போம் என்று பேசியிருந்தார்.
அதனை வைத்து இணையத்தில் பலரும் கிண்டல் அடித்தனர். இப்படி கங்குவா திரைப்படம் பேசு பொருளான சூழலில் பொங்கி எழுந்த நடிகை ஜோதிகா, ஏன் இந்த திரைப்படத்திற்கு மட்டும் இத்தனை விமர்சனங்கள் என கேள்வி எழுப்பினார். ஒட்டு மொத்தமாக பார்க்கையில் கங்குவா திரைப்படம் வெறும் எண்பது கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படியான சூழலில் 2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதின் தகுதி படங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இந்தியாவில் இருந்து சூர்யாவின் கங்குவாவும் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோல், மலையாளத்தில் பிரிதிவிராஜ் நடித்த ஆடு ஜீவிதம் திரைப்படமும் ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் உள்ளது.





