- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தில் இணைந்த முக்கியமான நபர்... போஸ்டரில் ஏ ஆர் ரகுமான் பெயர்...

சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தில் இணைந்த முக்கியமான நபர்… போஸ்டரில் ஏ ஆர் ரகுமான் பெயர் இல்லையே… அப்போ அது உண்மைதானா…

- Advertisement -

கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜுடன் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு கல்ட் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக்சன் கலந்த காதல் திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது.

 

- Advertisement -

அந்தமானில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய கார்த்தி சுப்பராஜ், வெறும் நான்கே மாதங்களில் படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்திருக்கிறார். தற்போது இதற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனேகமாக இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 

- Advertisement -

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூட்டோடு சூட்டாக ஆர் ஜே பாலாஜி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் சூர்யா. இதன் படப்பிடிப்பு பூஜை பொள்ளாச்சியில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில் நடைபெற்றது. தொடர்ந்து கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

 

ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி திரைப்படம் இது என்று கூறப்படுகிறது. இதில் திரிஷா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற சுவாசிகாவும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கிறார். மலையாள நடிகர் இந்திரன் உள்ளிட்டோரையும் ஆர் ஜே பாலாஜி படத்தில் சேர்த்து இருக்கிறார். இதனால் இந்த படத்தின் மீது மிகப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முந்தைய படத்தின் போஸ்டர்களிலும் ஏ ஆர் ரகுமானின் பெயர் இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில் தற்போது படத்தின் ஒளிப்பதிவாளராக ஜி கே விஷ்ணு இணைந்து இருப்பதை அறிவித்துள்ளனர். ஆனால் அந்தப் போஸ்டரில் ஏ ஆர் ரகுமானின் பெயர் இடம் பெறவில்லை.

 

இது ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பி உள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு ஏ ஆர் ரகுமானை அவரது மனைவி பிரிவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஒரு வருடம் இசையில் இருந்து ஏ ஆர் ரகுமான் விலகப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது வெறும் வதந்தி என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சூர்யாவின் 45வது திரைப்படத்தின் போஸ்டரில் ரகுமானின் பெயர் இல்லாமல் இருப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்