- Advertisement -
Homeபொழுதுபோக்குபரபரக்கும் சூர்யா படம்... அப்டேட்டுகளை அள்ளித் தெளிக்கும் கார்த்தி சுப்புராஜ்... வீடியோவை பார்த்து ரசிகர்கள் துள்ளல்...

பரபரக்கும் சூர்யா படம்… அப்டேட்டுகளை அள்ளித் தெளிக்கும் கார்த்தி சுப்புராஜ்… வீடியோவை பார்த்து ரசிகர்கள் துள்ளல்…

- Advertisement -

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அண்மையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். முதல் பாதி கேங்ஸ்டர் பாணியிலும், இரண்டாவது பாதி பழங்குடியினரின் வாழ்வியலை மையமாக வைத்தும் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

 

ஜிகர்தண்டா திரைப்படத்தின் பிரீக்குவலாக வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்திற்கு பிறகு தனது அடுத்த பிராஜெக்ட் குறித்த அறிவிப்பை கார்த்திக் சுப்புராஜ் வெளியிடாமல் இருந்தார். இருப்பினும் அவர் விஜய்யிடம் கதை கூறி வந்ததாக ஒரு தகவல் வெளியானது.

 

இரண்டு மூன்று கதைகள் விஜய்யிடம் அவர் கூற, அது தளபதி விஜய்க்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து ரஜினியிடமும் கதையைக் கூறியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஆனால் சூப்பர் ஸ்டாரும் நடிக்க தயாராக இல்லையாம். இப்படி வரிசையாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்க, கார்த்திக் சுப்புராஜ் யாரைத்தான் வைத்து இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.

 

இப்படியான சூழலில், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் சூர்யாவுடன் கைகோர்த்தார் கார்த்திக் சுப்புராஜ். இது விஜய்க்கு கூறிய கதை தான் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. சூர்யா ஏற்கனவே தனது 43வது திரைப்படத்திற்காக சுதா கொங்கரா உடன் கமிட்டாகி இருந்தார்.

 

ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த திரைப்படத்தின் வேலைகள் தள்ளி போக, இந்த சமயத்தில் தான் தனது 44வது திரைப்படத்திற்காக கார்த்தி சுப்பராஜுடன் கைகோர்த்தார். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். படத்தின் சூட்டிங் அந்தமானில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

 

 இந்த நிலையில் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவலும் அடுத்தடுத்து வெளியானது. பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்தமானில் படப்பிடிப்பு தொடங்கி இருக்கும் நிலையில், அதற்கான அறிவிப்பு வீடியோ இப்போது வெளியாகியிருக்கிறது. அதில் கடற்கரையை பார்த்தவாறு சூர்யா இருக்க, திடீரென திரும்பி முறைக்கிறார். அவரது கெட்டப்பே வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக சிங்கம் படத்திற்காக அவர் வளர்த்திருந்த மீசையுடன் சற்று தாடியையும் வைத்து காட்சியளிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அனேகமாக இந்த ஆண்டு இறுதியிலேயே, கார்த்திக் சுப்புராஜ் சூர்யா படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்