- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட்பேட் அக்லி படத்துக்கு பிறகு அஜீத் 64 படத்தை இயக்கப் போவது இந்த மாஸ் டைரக்டரா?...

குட்பேட் அக்லி படத்துக்கு பிறகு அஜீத் 64 படத்தை இயக்கப் போவது இந்த மாஸ் டைரக்டரா? – போடு வெடிய, அப்போ சிறுத்தை சிவா இல்லையா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் இப்போது ஐதராபாத்தில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அஜீத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சில நாட்கள் ஷூட்டிங்கில் நயன்தாரா பங்கேற்று நடித்ததும் உறுதியாகி விட்டது.

இந்த படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து 27 நாட்கள் ஐதராபாத்தில் ஒரே ஷெட்யூலாக நடத்தப்படுகிறது. அதன்பிறகு ஜூன் மாத இறுதியில் விடப்படும் ஒரு மாத இடைவெளியில், பாதியில் நிற்கும் விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜீத்குமார் கலந்துக்கொள்கிறார். அங்கு ஜூலை இறுதி வரை நடக்கும் ஷூட்டிங்கில் பங்கேற்று, படத்தை முடித்து விட்டு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

அடுத்து வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 3 மாதங்களுக்கு குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஜப்பான், அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதையே வெளிநாட்டில் கதை நடப்பது போன்றது என்பதால், கதைக்களமே வெளிநாடுகளாக அமைந்து விட்டது.

இதையடுத்து அக்டோபர் இறுதிக்குள் குட்பேட் அக்லி ஷூட்டிங்கை நிறைவு செய்கிறார் அஜீத்குமார். அந்த படத்தை வருகிற 2025ம் ஆண்டில் ஜனவரி 14 பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்பாக தீபாவளிக்கு, விடாமுயற்சி திரைக்கு வர வாய்ப்பிருக்கிறது. அல்லது பொங்கலுக்கு பிறகும் வெளியாக வாய்ப்புள்ளது.

- Advertisement -

இந்த சூழலில் குட்பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் இறுதிக்குள் நிறைவு செய்யும் அஜீத்குமார் அடுத்து தனது 64வது படத்தில் நடிக்கிறார். அதில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத்குமார் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்த நிலையில், இப்போது வேறு ஒரு இயக்குனர் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது 2 மணி நேரம் அஜீத்குமார் ஸ்பெஷல் இன்டர்வியூ தர வேண்டும் என்று சன்பிக்சர்ஸ் நிபந்தனை கூறியுள்ளது. அதே போல் அஜீத்குமார் சம்பளத்தை குறைக்கவும் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிபந்தனைகளுக்குமே அஜீத்குமார் உடன்படாத நிலையில், சிறுத்தை சிவா இந்தி படம் ஒன்றை இயக்க ஏற்கனவே கமிட் ஆகி இருக்கிறார். அப்படி அவர் இந்திக்கு சென்றுவிடும் பட்சத்தில் ஜெயம் ரவி அண்ணன் மோகன் ராஜா இயக்கும் படத்தில் அஜீத்குமார் நடிக்க இருப்பதாகவும், இருவரும் சந்தித்து கதை குறித்து பேசியதாகவும், அஜீத்குமார் டபுள் ஓகே சொல்லிவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்