- Advertisement -
Homeபொழுதுபோக்குமேடையில் திடீரென அப்படிப் பேசிய இயக்குனர் டி ராஜேந்தர், கோபமான எம்ஜிஆர், அடுத்த நாள் இராமாவரம்...

மேடையில் திடீரென அப்படிப் பேசிய இயக்குனர் டி ராஜேந்தர், கோபமான எம்ஜிஆர், அடுத்த நாள் இராமாவரம் தோட்டத்துக்கு சென்ற டிஆர் – அங்கு நடந்தது என்ன?

- Advertisement -

பொதுவாகவே பெரிய தலைவர்களை புகழ்பெற்ற மனிதர்களை அவர்களது பெயர் சொல்லி விளிப்பது அநாகரிகம் என்று கருதப்படுகிறது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களை தலைவர் என்றும் சின்னவர் என்றும்தான் அழைப்பதுதான் அப்போது வழக்கம். அதுதான் சினிமாவிலும் அரசியல் களத்தில் இருந்தது.

இப்போதும் கருணாநிதியை கலைஞர் என்றும் ரஜினியை சூப்பர் ஸ்டார் என்றும் கமல்ஹாசனை உலகநாயகன் என்றும் விஜயை தளபதி என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலினை தளபதியார் என்றும் விஜயகாந்தை கேப்டன் என்றுதான் சொல்வது வழக்கமாக உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 1983ம் ஆண்டில் நவம்பர் மாதம் நடந்த சம்பவம் இது. அப்போது புரட்சித் தலைவர் முதல்வர் எம்ஜிஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் தமிழ் சினிமாத்துறை சார்பில் டாக்டர் பட்டம் பெற்ற புரட்சித் தலைவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

அந்த விழாவில் சினிமா கலைஞர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். அந்த விழாவில் மேடையில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தர், வானில் உள்ள சந்திரனுக்கு கூட தேய்பிறை உண்டு. ஆனால் பூமியில் வாழும் முதல்வர் எம்ஜி இராமச்சந்திரனுக்கு எப்போதும் தேய்பிறை என்பதே இல்லை என்று பேசினார்.

- Advertisement -

இதைக்கேட்டு அங்கிருந்தவர்கள் எல்லாம் அதிர்ந்து போய்விட்டனர். எம்ஜிஆர் முகத்தில் சற்று கோபம் தென்பட்டது. ஏனெனில் எம்ஜிஆரின் பெயரை சொல்லி அவர் பேசியது எல்லோருக்கும் கோபத்தை தூண்டிவிட்டது. மறுநாள் எம்ஜிஆரின் இராமாவரம் தோட்டத்துக்கு வருமாறு இயக்குனர் டி ராஜேந்தருக்கு தகவல் வந்தது.

அவரும் நேரடியாக இராமாவரம் தோட்டத்துக்கு சென்றார். அப்போது எம்ஜிஆரை டிஆர் சந்தித்த போது, என் பேரை சொல்லித்தான் நீ அழைப்பாயா? என்று சற்று கோபமாக எம்ஜிஆர் கேட்டிருக்கிறார். அதற்கு டிஆர், கடவுள் முருகப்பெருமானையே முருகா என்றுதானே அழைக்கிறோம். அப்படி தெய்வம் ஸ்தானத்தில் வைத்துதான் உங்களை புகழ்ந்து பேசினேன் தலைவா என்று எம்ஜிஆரின் காலில் விழப் போயிருக்கிறார். அதைக்கேட்டு சிரித்த எம்ஜிஆர், அவரை கட்டியணைத்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தி திருப்பி அனுப்பியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்