- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்கள் கொண்டாடும் சில தமிழ் படங்களுக்கு ஏன் தேசிய விருது கிடைப்பது இல்லை - இதுதான்...

ரசிகர்கள் கொண்டாடும் சில தமிழ் படங்களுக்கு ஏன் தேசிய விருது கிடைப்பது இல்லை – இதுதான் காரணமா? – உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்!

- Advertisement -

எப்போதுமே ஒரு நல்ல படைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது அந்த படைப்புக்கு செய்கிற ஒரு கௌரவமாக இருக்கிறது. அந்த வகையில் தான் நல்ல படங்களுக்கு மத்திய அரசின் தேசிய விருது மாநில அரசின் சிறந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் கமல்ஹாசன் 3 முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். கவிஞர் வைரமுத்து 6 முறை தேசிய விருது பெற்றிருக்கிறார்.

இப்படி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி சினிமா துறை சார்ந்த ஏராளமானோர் தேசிய விருதுகளை பெற்றுள்ளனர். அதே போல் பல மொழி படங்களும் சிறந்த படங்களாக தேசிய விருது பெற்றிருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கப்படும் சில படங்களுக்கு தேசிய விருது என்பது கிடைப்பதில்லை.

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் சில படங்களை கொண்டாடி விடுகின்றனர். வசூலும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. ஆனால் அந்த படங்களுக்கு தேசிய விருது கிடைப்பது இல்லை. அதே போல் நடிகர்கள் சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் நாகேஷ் இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் போன்றவர்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் ஆர்வி உதயகுமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, இதுக்கு காரணம் ரசிகர்கள் கொண்டாடற படங்களை தேசிய விருதுக்கு அனுப்புவதில்லை. அந்த ஆண்டில் அப்படி அனுப்பாததால் அந்த படங்கள் விருது பெறுவதில்லை.

- Advertisement -

தேசிய விருதுக்கு அவர்கள் அறிவிக்கிற தேதிக்குள் தயாரிப்பாளர்கள் அந்த படத்தை அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்வதில்லை. இதில் யாருடைய தப்பு என்று தெரியாது. தயாரிப்பாளருக்கும் நடிகருக்கும்பிரச்னையா, இயக்குனருக்கும் நடிகருக்கும் பிரச்னையா என்று எதுவும் தெரியாது. ஆனால் தேசிய விருதுக்கு படத்தை அனுப்பாமல் அப்படியே விட்டு விடுவார்கள்.

படம் ஓடியதா, கலெக்சன் ஆனதா, லாபம் கிடைத்ததா என்று அப்படியே தூக்கி போட்டு விடுவார்கள். இப்படி விட்டு விடுவதால்தான் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களுக்கு தேசிய விருது கிடைப்பதே இல்லை என்று ஆர்வி உதயகுமார் கூறியிருக்கிறார். இந்த காரணம் ரசிகர்களுக்கு பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்