- Advertisement -
Homeபொழுதுபோக்குதங்களது இஷ்ட தெய்வங்களுக்கு சொந்த செலவில் கோவில் கட்டிய தமிழ் நடிகர்கள் - அட இத்தனை...

தங்களது இஷ்ட தெய்வங்களுக்கு சொந்த செலவில் கோவில் கட்டிய தமிழ் நடிகர்கள் – அட இத்தனை பேர் லிஸ்ட்டில் வர்றாங்களா?

- Advertisement -

சினிமாவில் பெயர் புகழ் பணம் சம்பாதித்த நடிகர்கள் சிலர் அதிக பக்தி கொண்டவர்களாக இருக்கின்றனர். தமிழ் சினிமா நடிகர்கள் சிலர் சொந்தமாக கோவில் கட்டி கடவுளை வழிபடுகின்றனர். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட அவர்கள் கடவுள் பக்தியால் தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு சொந்த செலவில் கோவில் கட்டி வழிபடுகின்றனர்.

ஆக்சன் கிங் என அழைக்கப்படும் நடிகர் அர்ஜூன் மிக தீவிரமான ஆஞ்சநேயர் சுவாமி பக்தர். சென்னை போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் அஞ்சனாசுத ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் சுவாமி மந்திரம் என்ற கோவிலை நடிகர் அர்ஜூன் சொந்தமாக கட்டியுள்ளார். இது அவரது 17 வருட கனவாகும். இந்த கோவிலில் 150 டன் எடை கொண்ட ஒற்றை கல் ஆஞ்சநேயர் சுவாமி சிலையும் ஸ்ரீ ராமர் விநாயகர் நாகராஜர் சன்னதிகளும் உள்ளன.

- Advertisement -

நடிகர் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் தீவிரமான சாய்பாபா பக்தர். தனது அன்னைக்காக சென்னை கொடுங்கையூரில் நடிகர் விஜய் சொந்த செலவில் சாய்பாபா கோவிலை கட்டியுள்ளார். மிகப் பெரிய அளவில் சாய்பாபா கோவில் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் இந்த கோவிலில் அன்னதானமும் ஒவ்வொரு கால பூஜை நேரத்திலும் பிரசாதமும் வழங்கப்படுகிறது. இந்த கோவில் சாய்பாபா மந்திர் என்று அழைக்கப்படுகிறது.

புரட்சித்தலைவர் ம்ஜிஆருக்கு தன் தாயார் சத்தியபாமா மீது இருந்த பாசம் காரணமாக அவர் சத்தியபாமா கோவில் கட்டியுள்ளார். சென்னை கோடம்பாக்கம் வீட்டிலேயே தனது தாயாருக்காக எம்ஜிஆர் கோவில் கட்டி உள்ளார். ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கட்டிய ஸ்ரீ சிவ சுடலைமாடசாமி கோவில் சென்னையில் உள்ள மதுரவாயலில் அமைந்துள்ளது. இங்கு பிரதான தெய்வங்களாக ஸ்ரீ சிவ சுடலைமாடசாமி ஸ்ரீ இசக்கி அம்மன் மற்றும் ஸ்ரீ கருப்பசாமி சன்னதிகள் உள்ளன.

- Advertisement -

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி கட்டிய அங்காள பரமேஸ்வரி கோவில் சென்னை ஆவடி பகுதியில் அமைந்துள்ளது. டேனியல் பாலாஜிக்கு இந்த கோவில் கட்ட கேஜிஎஃப் பட நடிகர் யஷ் பண உதவி செய்துள்ளார். பருத்திவீரன் பட நடிகர் சரவணன் தனது சொந்த ஊரான சேலம் ஓமலூரில் வெற்றி விநாயகர் கோவிலை சொந்தமாக கட்டியுள்ளார். இது அவரது நீண்ட கால ஆசை. தனது சொந்த கிராமத்தில் நடிகர் சரவணன் இந்த கோவிலை கட்டியிருக்கிறார்.

நடன இயக்குனர் நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னை திருமுல்லைவாயிலில் ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமி கோவிலை சொந்தமாக கட்டி இருக்கிறார். ஸ்ரீ ராகவேந்திரா சுவாமியின் தீவிர பக்தர் நடிகர் ராகவா லாரன்ஸ். தனது புதிய படத்தின் துவக்க விழா உட்பட அவரது வாழ்க்கையில் செய்யும் எந்த நல்ல விஷயத்தையும் இங்கு வந்து ராகவேந்திரர் சுவாமியை வழிபட்ட பிறகு தொடங்குவது அவரது வழக்கமாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்