- Advertisement -
Homeபொழுதுபோக்குசிக்ஸர் அடித்ததா டெஸ்ட் திரைப்படம்... ரசிகர்கள் கூறுவது என்ன... விமர்சனம் இதோ உங்களுக்காக...

சிக்ஸர் அடித்ததா டெஸ்ட் திரைப்படம்… ரசிகர்கள் கூறுவது என்ன… விமர்சனம் இதோ உங்களுக்காக…

- Advertisement -

மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள டெஸ்ட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இவரது தயாரிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி வெற்றியை பெற்றிருக்கின்றன.

குறிப்பாக மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படம் தான் இவரது தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படம். தமிழ் சினிமாவை வைத்து கலாய்த்த இந்த திரைப்படம், கலகலப்பாக இருந்ததால் ரசிகர்கள் அதனை கொண்டாடி தீர்த்தனர். தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, இறுதிச்சுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட திரைப்படங்களை சசிகாந்த் தயாரித்துள்ளார்.

இப்படியான சூழலில்தான் அவர் இயக்குனர் அவதாரம் எடுத்து டெஸ்ட் திரைப்படத்தை எடுத்தார். நயன்தாரா படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது கணவராக மாதவன் இடம் பெற்றுள்ளார். கிரிக்கெட் வீரராக சித்தார்த் நடித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீரா ஜாஸ்மின் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளார்.

இப்படி கவனிக்கத்தக்க நட்சத்திரங்கள் இருப்பதால் டெஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில், திடீரென ஓடிடி தளத்தில் படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கும் டெஸ்ட், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றிருக்கிறது.

கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து அதற்கு பின்னால் இருக்கும் நட்பு காதல் குடும்ப சிக்கல்களை உணர்வுபூர்வமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் சசிகாந்த். ஆனால் இது ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என்பது தான் இங்கு விமர்சனமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக டெஸ்ட் திரைப்படத்தை பார்க்க நிறையவே பொறுமை வேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள்.

முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி என இரண்டும் சுமாராகத்தான் இருப்பதாகவும், சித்தார்த்தின் கேரக்டர் சரியாக எழுதப்படவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தில் பாடல்களும் கை கொடுக்காத நிலையில், மாதவன் ரோலும் ரசிகர்களுக்கு நெருக்கமாக இல்லை என்பதே இங்கு குறையாக உள்ளது. நயன்தாரா ரோல் மட்டுமே நன்றாக எழுதப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மொத்தத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டெஸ்ட் திரைப்படம் சுமாராகவே வந்திருப்பதாக பேசப்படுகிறது.

சற்று முன்