- Advertisement -
Homeபொழுதுபோக்குகரூர் சம்பவத்தில் விஜய் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்…தவெக 2ம் கட்ட தலைவர்கள் விஜயை தவறாக வழிநடத்துகின்றனர்...

கரூர் சம்பவத்தில் விஜய் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்…தவெக 2ம் கட்ட தலைவர்கள் விஜயை தவறாக வழிநடத்துகின்றனர் – நடிகர் தாடி பாலாஜி ஆவேசம்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கடந்த 27ம் தேதி சனிக்கிழமை இரவு கரூரில் உள்ள வேலுச்சாமிபுரம் என்ற பகுதியில் மக்கள் சந்திப்பு பயணத்தில் மக்களிடையே பேசினார் அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த எதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சந்தித்த நடிகர் தாடி பாலாஜி ஆறுதல் கூறினார். நடிகர் விஜயுடன் பல படங்களில் தாடி பாலாஜி இணைந்து நடித்திருக்கிறார். தவெக கட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அதன் காரணமாக இன்று அவர் கரூருக்கு நேரில் வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

- Advertisement -

அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பாலாஜி கூறியதாவது, கூட்ட நெரிசலில் 9 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தது மிகவும் வேதனையானது. இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன் என் மனம் பதறியது. எனக்கும் உங்களுக்கும் என்ன மனவேதனை இருக்கிறதோ அதே மனவேதனை விஜய்க்கும் உள்ளது. கடந்த சில நாட்களாக விஜய் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார் என்பதை நான் உணர்கிறேன்.

கரூர் மக்களை மதித்ததால் தான் இன்று நான் அவர்களை சந்திக்க வந்தேன். யாருக்கும் நான் பயப்பட மாட்டேன். என் தலைவர் விஜய்க்காகத்தான் வந்தேன். அவர் இப்படியான ஒரு துயர சம்பவம் நடக்கும் என்று ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார். விஜய்க்கு 100 சதவீதம் எல்லாமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த சம்பவம் அவருக்கு ஒரு பாடமாக இருக்கும்.

- Advertisement -

பிரச்சார மேடை இடவசதி நேரம் போன்றவற்றை ஆய்வு செய்தவர்கள் இரண்டாம் கட்ட தலைவர்கள் தான். அவர்கள் விஜய்க்கு முறையான அறிவுறுத்தலை அளிக்க வேண்டும். விஜய் ஒரு நேர்த்தியான நபர். சூட்டிங் 7 மணிக்கு என்றால் 6:30 மணிக்கு ஸ்பாட்டில் இருப்பார். அவர் தாமதமாக வந்ததற்காக குறை கூட முடியாது. அவர் தனது அணியினரின் அறிவுறுத்தல்களை கேட்டு தான் வருகிறார்.

இரண்டாம் கட்ட தலைவர்கள் புஸ்லி ஆனந்த் ஆதவ் அர்ஜூனா சிடி நிர்மல் குமார் இவர்களுக்கு அரசியல் அனுபவம் உள்ளது, புதியவர்கள் அல்ல. இருந்தும் அவர்கள் பொறுப்புடன் நடக்கவில்லை. விஜய் வெளியிட்ட வீடியோவிலும் என்னை எது வேணாலும் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் அங்கே கூட அவர் தனது அணியினரை வெளிப்படையாக பேச விடவில்லை. இது வருத்தமாக உள்ளது என்று தாடி பாலாஜி கூறி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்