- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி 68 படத்தில் வந்த குழப்பம், அந்த நடிகை ஹீரோயின் இல்லையாம், அப்போ வேற யாரு?

தளபதி 68 படத்தில் வந்த குழப்பம், அந்த நடிகை ஹீரோயின் இல்லையாம், அப்போ வேற யாரு?

- Advertisement -

“லியோ” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் “தளபதி 68” திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். தற்போது விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவிற்கு சென்றிருக்கின்றனர்.

“தளபதி 68” திரைப்படத்தில் விஜய், தந்தை-மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம், ஆதலால் அந்த இரண்டு வேடங்களை மிகவும் தத்ரூபமாக படம் பிடிக்க அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள Institute of creative technology என்ற மையத்திற்குச் சென்று அங்கே விஜய்யை உடல் முழுவதும் ஸ்கேன் செய்யப்போகிறார்களாம்.

- Advertisement -

அதன் பின் ஸ்கேன் செய்யப்பட்ட விஜய்யின் உருவத்தை பயன்படுத்தி எந்தெந்த கோணங்களில் விஜய்யை படமாக்கலாம் என திட்டமிடப் போகிறார்களாம். இவ்வாறு ஒரு புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வெங்கட் பிரபு களமிறங்க உள்ளாராம்.

“தளபதி 68” திரைப்படத்தில் தந்தை விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க உள்ளார் எனவும் மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது. அதே போல் ஜெய், மகன் விஜய்யின் தம்பியாக நடிக்க உள்ளாராம். ஜெய்க்கு அபர்ணா தாஸ் ஜோடியாக நடிக்க உள்ளார் என்று, கூறப்படுகிறது.

- Advertisement -

விஜய்யும் ஜோதிகாவும் இதற்கு முன் “குஷி”, “திருமலை” ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த இரண்டு திரைப்படங்களும் வேற லெவலில் ஹிட் அடித்த திரைப்படங்கள் ஆகும்.

இந்த நிலையில் தற்போது வேறு மாதிரியான செய்திகள் வெளிவருகின்றன. அதாவது “தளபதி 68” திரைப்படத்தில் ஜோதிகாவை ஒரு Second Choice ஆகத்தான் வைத்திருக்கிறார்களாம். அந்த கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு நடிகையை தேடி வருகிறார்களாம்.

 

- Advertisement -

சற்று முன்