- Advertisement -
Homeபொழுதுபோக்குவாழைப்பழ காமெடி கூறி வயிறு குலுங்க சிரிக்க வைத்த விஜய்... அடப்பாவிகளா இந்த காட்சியை தூக்கிட்டிங்களே...

வாழைப்பழ காமெடி கூறி வயிறு குலுங்க சிரிக்க வைத்த விஜய்… அடப்பாவிகளா இந்த காட்சியை தூக்கிட்டிங்களே என ரசிகர்கள் ஆதங்கம்.

- Advertisement -

2010, 2011 ஆம் ஆண்டுகளில் விஜய்க்கு தொடர் தோல்வி திரைப்படங்களை அமைந்தன. அதுவும் வேட்டைக்காரன் சுறா என அடுத்தடுத்து வந்த திரைப்படங்கள் அனைத்தும் மொக்கை லிஸ்டில் சேர்ந்ததால் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது, விஜயும் ஒரு திருப்புமுனைக்காக காத்திருந்தார்.

 

- Advertisement -

இந்த சமயத்தில், விஜய்க்கு காவலன் திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியாக அந்த திரைப்படம் அந்த சமயத்தில் பெரிய வரவேற்பை பெறவில்லை. அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் விஜய் கடுமையான வசைச் சொல்லுக்கு ஆளானார். அவரை பலரும் கலாய்க்க தொடங்கினர்.

 

- Advertisement -

இப்படியான சூழலில் தான், ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைந்து துப்பாக்கி படத்தில் நடித்தார் விஜய். 2012 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்த திரைப்படம் வெளியானது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த திரைப்படம் வெளியாகி, மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. விடுமுறைக்காக தனது வீட்டிற்கு வரும் ராணுவ வீரர், நகரில் நடக்கும் பிரச்சினைகளை கையில் எடுத்து சமாளிப்பதுதான் இந்த திரைப்படத்தின் சுருக்கமான கதை.

 

முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவான துப்பாக்கி, ரசிகர்களின் கொண்டாட்ட திரைப்படம் என்று கூறலாம். குறிப்பாக விஜய் ரசிகர்கள் தியேட்டரில் அலப்பறை கொடுக்கும் வகையில் காட்சிகளை வைத்திருந்தார் ஏ ஆர் முருகதாஸ். குறிப்பாக படத்தின் இடைவேளை காட்சி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதே போல் கிளைமாக்ஸ் காட்சியையும் ஆக்சன் பாணியில் கலக்கி இருந்தார் ஏ ஆர் முருகதாஸ்.

 

இந்தக் கூட்டணி அடுத்ததாக எடுத்த கத்தி திரைப்படமும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. இரண்டு திரைப்படங்களுக்குமே கதைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததால் அது ரசிகர்களிடம் சென்று ரீச் ஆனது. இந்த இரண்டு திரைப்படங்களும் வெற்றி அடைந்தது குறித்து ஒரு முறை பேசி இருந்த ஏ ஆர் முருகதாஸ், துப்பாக்கியோ கத்தியோ வைக்கும் குறி கரெக்ட்டா இருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று கூறி கைத்தட்டல்களை பெற்றார்.

 

இந்த நிலையில் துப்பாக்கி திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் போலீஸ் அதிகாரிகளிடம், நடிகர் விஜய் கரகாட்டக்காரன் திரைப்பட வாழைப்பழ காமெடியை கூறுகிறார். அவர் ஹிந்தியில் அந்த காமெடியை எடுத்துக் கூறுவது ரசிக்கும் வகையில் உள்ளது. இந்த காட்சி தற்போது இணையத்தில் பெயராகி இருக்கும் நிலையில் இதை ஏன் ஏ ஆர் முருகதாஸ் வைக்கவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்