- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்துக்கு அப்படி ஒரு தரமான சம்பவம், உலக சினிமா வரலாற்றில் நடிகர் ராமராஜன் செய்த...

அந்த படத்துக்கு அப்படி ஒரு தரமான சம்பவம், உலக சினிமா வரலாற்றில் நடிகர் ராமராஜன் செய்த சாதனை – அடேங்கப்பா.. அசந்து போன ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிக்க வந்த பல நடிகர்கள் நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகன் என்று சொல்லி பெருமை தேடிக்கொண்டார்கள். ஆனால் அவரது கொள்கையை யாரும் பின்பற்றியதாக தெரியவில்லை. ஆனால் நடிகர் ராமராஜன் எம்ஜிஆரின் முக்கிய கொள்கைகளில் ஒன்றை தனது படங்களில் நிச்சயமாக அவர் கடைபிடித்தார். அதனால் எம்ஜிஆர் ரசிகர் என்று சொல்வதில் அவருக்கு தனிப் பெருமை உள்ளது.

எம்ஜிஆர் சினிமாவில் உச்ச நடிகராக மாறிய நிலையில் அவர் நடித்த படங்களில் மதுபானம் குடிப்பது போலவும் சிகரெட் புகைப்பது போலவும் காட்சிகளின் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். என்னை பார்த்து என் ரசிகர்களும் அந்த கெட்ட பழக்கங்களை பழகி உடல் நலத்தையும் வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்வார்கள் என்று கூறிவிட்டார்.

- Advertisement -

அதே வழியில் நடிகர் ராமராஜன் அவரது படங்களில் சிகரெட் பீடி புகைப்பது போலவோ அல்லது மதுபானம் அருந்துவது போன்ற காட்சிகளிலேயே நடித்தது இல்லை. ஒரு கோடி ரூபாய் சம்பளம் தந்தாலும் அதுபோன்ற காட்சிகளில் நான் நிச்சயமாக நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்தவர்தான் நடிகர் ராமராஜன்.

நடிகர் ராமராஜன் நடித்த படங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் கரகாட்டக்காரன். கடந்த 1989ம் ஆண்டில் வெளியான இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் இன்றும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய கிராமிய படமாக இருந்து வருகிறது. கங்கை அமரன் இந்த படத்தை டைரக்ட் செய்திருந்தார். இளையராஜா இசையில் இந்த படத்தின் இசை பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றன.

- Advertisement -

கரகாட்டக்காரன் படம் 2ம் பாகமா வெளிவருமா என்று இன்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அந்த காலத்திலேயே சூப்பர் ஹிட் படமாக இருந்தது. சில தியேட்டர்களில் ஓராண்டு காலம் வரை இந்த படம் ஓடியது. பல தியேட்டர்களில் 100 150 200 250 நாட்கள் என இந்த படம் ஓடியது. கரகாட்டக்காரன் படத்தை திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடினர்.

கரகாட்டக்காரன் படத்துக்கு பிறகு இந்திய சினிமாவில் மட்டுமின்றி உலக சினிமாவிலேயே ஒரே மாதத்தில் 43 திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரே ஹீரோ நடிகர் ராமராஜன் மட்டும்தான் . கரகாட்டக்காரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் நடிகர் ராமராஜன் வீடு தேடி போகாத இயக்குனர்களும் இல்லை தயாரிப்பாளர்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்