- Advertisement -
Homeபொழுதுபோக்குரூ. 1200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படத்தின் மையக்கரு இதுதான்.. ராஜமௌலி போட்ட மெகா...

ரூ. 1200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படத்தின் மையக்கரு இதுதான்.. ராஜமௌலி போட்ட மெகா பிளான்… அடி பொலி, இது வேற லெவலா இருக்குதே?

- Advertisement -

இந்திய சினிமா ரசிகர்களுக்கு மிக நல்ல படங்களை தந்து மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ராஜமௌலி. ஏற்கனவே இந்திய அளவில் மிகப்பெரிய சாதனையை அவர் இயக்கிய பாகுபலி படம் மூலம் படைத்துவிட்டார். இப்போது ஹாலிவுட்டையே மிஞ்சும் அளவுக்கு மகேஷ் பாபு நடிக்கும் ஒரு திரைப்படத்தை இப்போது ராஜமௌலி உருவாக்கி வருகிறார்.

வழக்கமாக ஹாலிவுட் படங்கள் மட்டுமே 100க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும். ஆனால் முதல்முறையாக ஒரு இந்திய திரைப்படம் 130 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. அது இயக்குனர் ராஜமெளலி மற்றும் நடிகர் மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகும் படமாக அது உள்ளது. தெலுங்கு சினிமாவின் தரத்தை இந்தியாவில் உயர்த்திய ராஜமௌலி இப்போது உலக அளவில் உயர்த்த திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

இப்போது ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் பல மொழிகளில் வெளியாகப் போகிறது. இந்த படத்தின் பட்ஜெட்டும் 1200 கோடி ரூபாய் எனகின்றனர். படத்தின் உண்மையான பட்ஜெட் இதுதான் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் இந்திய சினிமா வரலாற்றில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் முதல் படம் இதுதான் என்று கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படத்தின் கதை காசி மாநகரத்தின் தொன்மையை சொல்லும் கதைக்களத்தில் உருவாகிறது. அதாவது இந்து போற்றிப் புகழும் புனிதமான காசியின் வரலாற்றை எடுத்து கூறும் தொன்மக் கதையாக 2 பாகங்களாக இந்த படம் உருவாகி வருகிறது.

- Advertisement -

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. மிகப் பெரிய பட்ஜெட் படம் என்பதால் படத்தின் வியாபாரமும் பெரிய அளவில் இருக்கும் எனவும் தெரிகிறது. அத்துடன் உலகம் முழுவதும் 130க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படத்தை வெளியில வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக அளவில் அதிக வசூலை ஈட்டிய படம் அவதார். அந்த அவதார் படத்தின் வசூலை ராஜமௌலி இயக்கும் இந்த புதிய படம் முந்திவிடும் என்றும் இப்போது எதிர்பார்க்கப்படுகிறது. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ராஜமௌலியின் இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்