- Advertisement -
Homeபொழுதுபோக்குதாய்கிழவி ஓடிடி ரிலீஸ் எப்போது? உறுதியான அறிவிப்பு வந்தாச்சு - உற்சாகத்தில் ரசிகர்கள்!

தாய்கிழவி ஓடிடி ரிலீஸ் எப்போது? உறுதியான அறிவிப்பு வந்தாச்சு – உற்சாகத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகை ராதிகா சரத்குமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே என்ன விதமான கேரக்டர் என்றாலும் அதில் தனது அருமையான அழுத்தமான நடிப்பை தந்து ரசிகர்களை அசத்தி விடுகிறார். அதனால் அவரது கேரக்டர் எல்லாமே பேசப்படுகின்றன.

அந்த வகையில் பல படங்களில் ஹீரோக்களுக்கு இடையான நல்ல கேரக்டர்களில் நடித்து பெயர் வாங்கியவர் நடிகை ராதிகா சரத்குமார். குறிப்பாக அவரது சினிமா பயணத்தில் கிழக்கு சீமையிலே படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படமாகும். அதே போல் சித்தி அண்ணாமலை வாணி ராணி போன்ற சீரியல்களும் அவரது பெயரை புகழை இன்னும் அதிகரித்தது.

- Advertisement -

சினிமா நடிகையாக மட்டுமின்றி ராடன் பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வரும் ராதிகா சரத்குமார் பல படங்களை பல டிவி சீரியல்களை தயாரித்திருக்கிறார். அவரது கணவர் நடிகர் சரத்குமாருடன் இணைந்து கட்சி பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால் இந்த முறை பாஜக கூட்டணியில் இருந்தாலும் நானும் என் மனைவியும் இந்த தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டியிட் போவதில்லை என்று நடிகர் சரத்குமார் ஏற்கனவே அறிவித்து விட்டார்.

- Advertisement -

இந்நிலையில் அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்த படம் தாய்கிழவி. இந்த படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் வசூலிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. இதுவரை 80 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தியேட்டரில் பார்த்தாலும் வீடுகளில் டிவியில் பார்க்க ரசிகர்கள் பலரும் ஆர்வமாக உள்ளனர். இதற்கிடையே தாய்கிழவி படம் ஓடிடி ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 10ம் தேதி தாய்கிழவி படம் ஜியோ ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் ஆகிறது என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்