- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு படத்தோட வெற்றிக்கு அந்த விஷயம் எவ்ளோ முக்கியமுன்னு நடிகர் விஜய்க்கு தெரியாதா, தெரிஞ்சே இப்படி...

ஒரு படத்தோட வெற்றிக்கு அந்த விஷயம் எவ்ளோ முக்கியமுன்னு நடிகர் விஜய்க்கு தெரியாதா, தெரிஞ்சே இப்படி பண்ணலாமா? – போட்டு தாக்கிய பிரபலம்!

- Advertisement -

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படத்தில் முக்கிய ஹீரோ நடிக்கிறார் என்றால், ஏதேனும் ஒரு நாளிதழில் விளம்பரம் வரும். அதுவும் சில நடிகர்களுக்கு மட்டும்தான். இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை கதாநாயகன்கள் நடித்த படம் என்றால், தியேட்டரில் ரிலீஸ் ஆகும் போதுதான் அந்த விவரமே ரசிகர்களுக்கு தெரிய வரும்.

தியேட்டர் முன்பகுதியில் அல்லது பொது இடங்களில் ஒட்டப்படும் சினிமா டைட்டில் போஸ்டர்களை பார்த்துதான் அதில் நடித்துள்ள நடிகை, நடிகையர், இசையமைப்பாளர், தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட விவரங்களை படித்து பார்த்து அறிந்துக்கொள்ள முடியும். அதன்பிறகு சினிமா சார்ந்த பத்திரிகைகள் வாயிலாகவும் அவ்வப்போது ரசிகர்கள் முக்கிய தகவல்களை அறிந்துக்கொண்டனர்.

- Advertisement -

ஆனால் இப்போது நிலமை அப்படியல்ல, ஒரு படம் குறித்த ஆரம்ப கட்ட பேச்சு துவங்குவதில் இருந்து, படம் ரிலீசாகி தியேட்டருக்கு வரும் வரை, அந்த படம் சார்ந்த ஒவ்வொரு விஷயங்களும் சோஷியல் மீடியாவில் அப்பேட் ஆகிக்கொண்டே இருக்கின்றன. சினிமாவில் நாளுக்கு நாள் போட்டியும் அதிகரித்துக்கொண்டே போகிறது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பெரிய நடிகர்கள் படமாகவே இருந்தாலும் அவர்களும் பிரமோ நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருக்கிறது. ஜெயிலர் இசை வெளியீட்டு விழா, லால் சலாம் இசை வெளியீட்டு விழாக்களில் ரஜினி பங்கேற்க காரணம், படத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கத்தான். அதே போல் கமலும் விக்ரம், இந்தியன் 2 என இசை வெளியீடுகளில் பங்கேற்கவும் அதுதான் காரணம்.

- Advertisement -

ஆனால் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள தி கோட் படத்துக்கு இசை வெளியீட்டு விழா வேண்டாம் என்று நடிகர் விஜய் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அவரது கட்சிக்கொடி அறிமுகம் செய்யப்பட உள்ளதால் இரண்டு நிகழ்ச்சிகள் வேண்டாம் என்று அவர் கூறிவிட்டதாக தெரிகிறது. படம் வேறு, கட்சி வேறு என்று கூறும் அவரே இரண்டு நிகழ்ச்சிகளை ஏன் வெவ்வேறாக பார்க்க மறுக்கிறார் என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்நணன் கூறுகையில், ஒரு படத்துக்கு ஆடியோ லாஞ்ச் பெரிய சப்போர்ட் ஆக இருக்கிறது. ஜெயிலர் படம் ஆடியோ லாஞ்சுக்கு பிறகுதான் பெரிய அளவில் ரீச் ஆனது. கோடிக்கணக்குல பணத்தை கொட்டி படம் எடுக்கிற தயாரிப்பாளர்களுக்கு எப்படி சப்போர்ட் பண்ணி, படத்தை பிரமோட் பண்றதுன்னு விஜய்க்கு தெரியாதா, என்று கேள்வி கேட்டுள்ளார் அந்தணன்,

- Advertisement -

சற்று முன்