- Advertisement -
Homeபொழுதுபோக்குபலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பராசக்தி படத்தின் டிரெய்லர்… அட அந்த காலத்துல வாழ்ந்த பீலிங்...

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பராசக்தி படத்தின் டிரெய்லர்… அட அந்த காலத்துல வாழ்ந்த பீலிங் இப்பவே வருதே… என ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்து வருகிறார். கடைசியாக அமரன் படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை கொடுத்தது. அதன்பிறகு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த மதராஸி படமும் நல்ல வரவேற்பை பெற்ற படமாக தான் இருந்தது. நிச்சயமாக அதுவும் சிவகார்த்திகேயனுக்கு ஆக்சன் ஹீரோவாக அடையாளம் தந்த படமாக இருந்தது.

இதையடுத்து தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். நடிகர்கள் அதர்வா ரவி மோகன் குரு சோமசுந்தரம் சேத்தன் பசில் ஜோசப் நடிகை ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். வருகிற 10ம் தேதி பராசக்தி படம் திரைக்கு வர உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இன்று மாலை பராசக்தி படத்தின் பராசக்தி டிரெய்லர் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை கவனத்தை பெற்று வருகிறது. இது 1960 – 65 காலகட்டத்தில் நடக்கும் ஒரு கதையாக உருவாகி உள்ளது. மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் என்பவரது வாழ்க்கை கதை தான் இந்த படம் என்று சொல்லப்படுகிறது.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதர்வா இருவரும் சகோதரர்கள். இதில் சிவகார்த்திகேயன் இந்தி பேசும் ஸ்ரீலீலாவை காதலிக்கிறார். எனக்கு இந்தி கத்துக்கொடு என்றும் கேட்கிறார். ஆனால் அதர்வா இந்தியை எதிர்க்கும் ஒரு மாணவராக போராட்ட களத்தில் ஆவேசமாக காணப்படுகிறார். பல மாணவர்கள் போராட்டங்கள் நடப்பது காட்சிகளில் தெரிகிறது. இந்நிலையில் அதர்வா கொல்லப்படுவதால் அவரது இடத்துக்கு சிவகார்த்திகேயன் வந்து இந்தியை எதிர்ப்பது போன்ற கதைக்களம் என்பதை டிரெய்லர் வெளிப்படுத்துகிறது.

- Advertisement -

இந்த படத்தில் பணக்கார வில்லனாக நடிகர் ரவிமோகன் நடித்திருக்கிறார். இதுதான் ரவி மோகன் மற்ற ஹீரோ படத்தில் வில்லனாக நடிப்பது முதல் முறை. இந்த படத்தில் அவரது வில்லன் கேரக்டர் பேசப்பட்டால் விஜய் சேதுபதி போல அவரும் பல முன்னணி ஹீரோக்களுடன் வில்லன் கேரக்டரில் தோன்ற அதிக வாய்ப்புள்ளது.

பராசக்தி டிரெய்லரை பொருத்த வரை இது ஒரு பழைய காலகட்டத்தில் எடுக்கப்பட்ட புதிய படம். கதைக்களமும் இந்தி திணிப்பு எதிர்ப்பை தான் மையப்படுத்தி உள்ளது. இது எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்துமா என்ற கேள்விக்கு வரும் 10ம் தேதிக்கு பிறகு தியேட்டர்களில் ரசிகர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். மற்றபடி இந்த டிரெய்லர் படக்குழுவின் அசாத்தியமான உழைப்பை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

- Advertisement -

சற்று முன்