பசங்க படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். இவரது இயக்கத்தில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா படத்திலும் வம்சம் படத்தில் நடிகர் அருள்நிதியும் அறிமுகம் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சிவகார்த்தியேகன் நட்சத்திர நடிகராக தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கிறார்.
கடைக்குட்டி சிங்கம் நம்ம வீட்டுப்பிள்ளை இது நம்ம ஆளு எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். இவரது படங்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவாகி இருக்கும். குறிப்பாக பெண்களின் கேரக்டர்களுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கும்.
விஜய் சேதுபதி நித்யாமேனன் நடித்த தலைவன் தலைவி படத்தை பாண்டிராஜ் டைரக்ட் செய்திருந்தார். இந்த படம் இந்த ஆண்டில் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தது. கணவன் மனைவி சண்டைதான் இந்த படத்தின் மைய கதைக்களமாக இருந்தது. இதில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டர் கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் ஒரு புதிய படத்தை இப்போது இயக்கி வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்து வருகின்றனர். தலைவன் தலைவி படம் ரூ. 100 கோடி வசூலித்த மாஸ் ஹிட் படமாக இருந்தது. இந்நிலையில், அடுத்து இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குவதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
இந்த படத்தை தயாரிப்பது லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் சிஇஓவாக இருந்த தமிழ் குமரன், இப்போது அவரது சொந்த தயாரிப்பாக இந்த படத்தை தயாரிக்கிறார். இயக்குனர் பாண்டிராஜனுக்கு கடந்த காலங்களில் பொருளாதார ரீதியாக பலமுறை பணம் கொடுத்து உதவி செய்தவர் தமிழ் குமரன். பாண்டிராஜ் சொத்துகளை பாண்டிராஜ் வாங்கிய போது அதற்கு கணிசமான தொகை தமிழ்குமரன் தந்து உதவியிருக்கிறார்.
அதற்கெல்லாம் நன்றிக்கடனாக இப்போது தமிழ் குமரனின் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தை பாண்டிராஜ் டைரக்ட் செய்து வருகிறார். அது மட்டுமின்றி இந்த படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி கேரக்டரிலும் தமிழ் குமரனை நடிக்க வைத்திருக்கிறார் பாண்டிராஜ் என்ற லேட்டஸ்ட் தகவலும் வெளியாகி உள்ளது. தமிழ்குமரனும் நடிகராகி விட்டாரா என்பதுதான் ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை தந்துள்ளது.





