- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ்க்கு தந்தையாக நடிக்க ரகுவரன் ஒப்புக்கொண்டதற்கு இதுதான் காரணமாம் - ரகுவரனின் சகோதரர் அளித்த பதில்

தனுஷ்க்கு தந்தையாக நடிக்க ரகுவரன் ஒப்புக்கொண்டதற்கு இதுதான் காரணமாம் – ரகுவரனின் சகோதரர் அளித்த பதில்

- Advertisement -

கடந்த 2008-ஆம் ஆண்டு மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான படம் “யாரடி நீ மோகினி” இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். அதோடு இந்த படத்தில் கார்த்திக் குமார், சரண்யா மோகன், கருணாஸ், விஸ்வநாத் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்த வேளையில் தனுஷின் தந்தை கதாபாத்திரத்தில் ரகுவரன் நடித்திருந்தார்.

Dhanush-and-Nayanthara

இந்த படத்தில் தனுசு தந்தையாக உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ரகுவரன் இறுதியில் இறப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதேபோன்று இந்த படம் வெளியாவதற்கு முன்னதாகவே அவர் இறந்துவிட்டார். எனவே அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக டைட்டில் கார்டில் கூட அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டிருக்கும்.

இந்நிலையில் ரகுவரன் கடைசியாக நடித்த இந்த “யாரடி நீ மோகினி” படத்தில் அவர் ஏன் தனுஷின் தந்தையாக நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது குறித்து தற்போது ரகுவரனின் சகோதரர் தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் :

Dhanush-and-Nayanthara

யாரடி நீ மோகினி படத்தின் கதையை கேட்ட பிறகு தனுஷ் தான் நேரடியாக ரகுவரனிடம் வந்து இது போன்ற தந்தை வேடம் எனது படத்தில் உள்ளது. நான் அந்த கதையை கேட்டதுமே உங்களை தான் நினைத்துக் கொண்டேன். கட்டாயம் எனக்காக நீங்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என தனுஷ் ரகுவரனிடம் கேட்டுக் கொண்டார். உடனே ரகுவரனும் தனுஷின் தோள் மீது கைபோட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதோடு : பார்ப்பதற்கு அப்படியே நீ என் மகனைப் போன்று இருக்கிறாய். நிச்சயம் அதற்காகவே நான் இந்த படத்தில் உனக்கு தந்தையாக நடிக்கிறேன் என தனுசுக்கு ரகுவரன் வாக்கு கொடுத்தார். அதன்பிறகே அவர் அந்த படத்தில் நடித்து முடித்தார் என ரகுவரனின் சகோதரர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்