- Advertisement -
Homeபொழுதுபோக்குகல்யாணம் செஞ்சுட்டா என்னால அப்படி இருக்க முடியாது, அதனால தான் பண்ணிக்கலே - 62 வயதான...

கல்யாணம் செஞ்சுட்டா என்னால அப்படி இருக்க முடியாது, அதனால தான் பண்ணிக்கலே – 62 வயதான பிரபல காமெடி நடிகை கோவை சரளா ஓபன் ஸ்டேட்மென்ட்

- Advertisement -

தமிழ் சினிமாவில் கோவை சரளா, ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு சிறந்த காமெடி நடிகையாக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார். 62 வயதிலும் இன்னும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக கோவை சரளா இருந்து வருகிறார். இப்போதும் பல படங்களில் கோவை சரளா பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தானை முடிச்சு, சின்னவீடு படங்களில், கோவை சரளாவுக்கு மிக முக்கியமான கேரக்டர்கள் தந்து, அவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலப்படுத்தியவர் நடிகர் மற்றும் இயக்குனர் கே. பாக்யராஜ். அதைத் தொடர்ந்து பல படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கு ஜோடியாக நடித்து கோவை சரளா தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகையாக மாறினார்.

- Advertisement -

கோவை சரளாவின் சிவந்த நிறமும், பரிச்சயமான முகமும், யதார்த்தமான நடிப்பும் குறிப்பாக அவரது கோவை அழகு கொங்கு தமிழ் பாஷையும் ரசிகர்களின் மனதில் வெகு எளிதாக ஆழமாக பதிந்து போய்விட்டது. உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனே, சதிலீலாவதி படத்தில் கோவை சரளா தான் எனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டு அவருடன் ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கோவை சரளா காமெடி கேரக்டர்களில் மட்டுமின்றி அம்மா, அண்ணா, அண்ணி கேரக்டர்களில் இப்போது நடித்து வருகிறார். செம்பி போன்ற படங்களில் வித்யாசமான கேரக்டர்களிலும் நடிக்கிறார். ஆச்சி மனோரமாவுக்கு அடுத்தபடியாக காமெடி நடிப்பில் நிலைத்து நின்றவர் நடிகை கோவை சரளா என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கோவை சரளாவுக்கு இப்போது 62 வயதாகிறது. ஆனால் திருமணம் செய்யாமல் தனிமரமாகவே வாழ்ந்து வருகிறார். ஆனால் இவரது 4 சகோதரிக்கு திருமணம் செய்து வைத்து, அவர்களது பிள்ளைகளின் கல்வி செலவு உள்பட, அந்த குடும்பங்களை இப்போது வரை கோவை சரளாதான் பாதுகாத்து பராமரிப்பு வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற கோவை சரளா கூறுகையில், நாம் பிறக்கும்போது தனியாக பிறக்கிறோம். இறக்கும் போது தனியாக தான் இறக்கிறோம். இடையில் இந்த உறவுகள் தேவையே இல்லை என்று தோன்றியது. சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான், நான் திருமணமே செய்துக் கொள்ளவில்லை. எனக்கு யாரையும் சார்ந்து வாழ விருப்பமில்லை என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகை கோவை சரளா.

- Advertisement -

சற்று முன்