- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் ஜீவி பிரகாஷ்குமார் விஜய் ஆண்டனி - 3 பேருக்கு ஒரே நேரத்தில் இப்படி ஒரு...

சிவகார்த்திகேயன் ஜீவி பிரகாஷ்குமார் விஜய் ஆண்டனி – 3 பேருக்கு ஒரே நேரத்தில் இப்படி ஒரு ஒற்றுமையா? இது வேற லெவலா இருக்குதே?

- Advertisement -

துவக்கத்தில் இசையமைப்பாளராக பல படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனி. வேட்டைக்காரன் நான் அவன் இல்லை உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணிசெய்திருக்கிறார். சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான மதகஜ ராஜா படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிதான்.

ஒரு கட்டத்துக்கு பிறகு நான் என்ற படம் மூலம் நடிகராக மாறினார். சலீம் பிச்சைக்காரன் திமிரு புடிச்சவன் இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். இப்போது சக்தி திருமகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனியை போலவே இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் நடிகர் ஜீவி பிரகாஷ்குமார்.

- Advertisement -

வெயில் படம் மூலம் இசையமைப்பாளரான ஜீவி பிரகாஷ்குமார், பிறகு ஆயிரத்தில் ஒருவன் அங்காடித் தெரு கிரீடம் பொல்லாதவன் ஆடுகளம் தலைவா என பல படங்களுக்கு இசையமைத்தார். பிறகு டார்லிங் படம் மூலம் நடிகராக மாறிய ஜீவி பிரகாஷ் தொடர்ந்து திரிஷா இல்லேன்னா நயன்தாரா குப்பத்து ராஜா செம ஜெயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடந்தாண்டில் அவர் நடித்த அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்தியேகன் நடித்த பிறகு அவரது சம்பளம் 35 கோடி ரூபாயில் இருந்து 75 கோடி ரூபாயாக மாறிவிட்டது. விஜய் இடத்துக்கு சிவகார்த்திகேயன் வந்துவிடுவார் என்று சொல்லும் அளவுக்கு முன்னணி நடிகராக மாறி விட்டார்.

- Advertisement -

சிவகார்த்திகேயன் 2012ம் ஆண்டில் வெளியான மெரினா படம் மூலமாகவும், அதே ஆண்டில் வெளியான நான் படம் மூலம் விஜய் ஆண்டனியும் தமிழ் சினிமாவில் நடிகர்களாக அறிமுகம் ஆனார்கள். கடந்த 2015ம் ஆண்டில் வெளியான டார்லிங் படம் மூலம் ஜீவி பிரகாஷ்குமார் நடிகராக அறிமுகமானார்.

இவர்கள் 3 பேருமே இப்போது தங்களது 25 வது படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி, விஜய் ஆண்டனி நடிக்கும் சக்தி திருமகன் ஜீவி பிரகாஷ்குமார் நடிக்கும் கிங்ஸ்டன் ஆகிய படங்கள் அவர்களது 25வது படங்களாக உள்ளன. இதில் 2 பேர் இசையமைப்பாளர்களாக இருந்து நடிகர்கள் ஆனவர்கள். அதிலும் 3 பேருமே பாடகர்கள் என்பதும் முக்கிய ஒற்றுமையாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்