- Advertisement -
Homeபொழுதுபோக்குதக்லைஃப் படம் பிரமோசன் நிகழ்ச்சியில் இந்த முறை முக்கிய முடிவு எடுத்த நடிகர் கமல்ஹாசன் -...

தக்லைஃப் படம் பிரமோசன் நிகழ்ச்சியில் இந்த முறை முக்கிய முடிவு எடுத்த நடிகர் கமல்ஹாசன் – தமிழ் சினிமாவில் யாரும் இதுவரை இதைச் செய்யலையே?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் இருவரும் 37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் படம் தக்லைஃப். கடந்த 1987ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் நாயகன். மும்பையை சேர்ந்த வேலுநாயக்கர் என்ற கேரக்டரில் தாதா கேரக்டரில் கமல் இந்த படத்தில் நடித்திருந்தார். இதற்காக சிறந்த நடிகர் தேசிய விருதும் பெற்றார்.

நாயகன் படத்தில் சரண்யா பொன்வண்ணன் நாயகியாக அறிமுகமானார். மேலும் இந்த படத்தில் நாசர் ஜனகராஜ் டெல்லி கணேஷ் கார்த்திகா நிழல்கள் ரவி விஜயன் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் தென்பாண்டி சீமையிலே பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

- Advertisement -

ஆனால் மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்த மணிரத்னம் கமல்ஹாசன் நாயகன் படத்துக்கு பிறகு மீண்டும் இணைந்து படம் பண்ணவே இல்லை. 37 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் அந்த வாய்ப்பு மீண்டும் கைகூடி இருக்கிறது. இதற்கும் கமலும் மணிரத்னமும் நெருக்கமான உறவினர்களாகவும் உள்ளனர்.

கமலின் அண்ணன் சாருஹாசனின் மகள் சுஹாசினியை தான் மணிரத்னம் திருமணம் செய்திருக்கிறார். அதாவது மணிரத்னத்துக்கு கமல்ஹாசன் சின்ன மாமனார். அதே போல் கமல்ஹாசனுக்கு மணிரத்னம் மருமகன் ஆகிறார். இப்படிப்பட்ட நெருக்கமான உறவில் இருந்தும் கமல் மணிரத்னம் கூட்டணி 37 ஆண்டுகளுக்கு பிறகுதான் தக்லைஃப் படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது.

- Advertisement -

வருகிற மே 16ம் தேதி சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீடு விழா நடைபெற உள்ளது. ஏற்கனவே ஜிங்குச்சா பாடல் வெளியாகி பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றிருக்கிறது. மேலும் படத்தின் பிரமோசனை பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு செல்ல மணிரத்னம், கமல் திட்டமிட்டுள்ளார்.

வழக்கமாக தமிழ் சினிமா படங்களின் பிரமோசன் சென்னை கோவை மதுரை திருச்சி என நடத்தப்படும். பிறகு கர்நாடகா ஆந்திரா கேரளா மாநிலங்களுக்கு செல்வர். துபாய் சிங்கப்பூர் மலேசியா நாடுகளில் பிரமோசன் நடத்தப்படும். ஆனால் தக்லைஃப் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியை இந்த முறை ஆஸ்திரேலியா நாட்டில் நடத்துகின்றனர். கமல் மணிரத்னம் சிம்பு திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் விரைவில் ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்